Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Mayil
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.09.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தங்கமயில் சொன்ன விஷயத்தால் பாண்டியன் எடுத்த முடிவு, கோபப்படும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

எழுதியவர்subhashini30 செப்டம்பர், 2025 அன்று 06:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் அப்பா மாணிக்கம் கடையில் எந்த வேலையுமே செய்யாமல் இருந்தார். பின் வீட்டிற்கு கிளம்பும்போது தேவையான மளிகை பொருள்களை சரவணன் எடுத்து வைத்தார். உடனே மாணிக்கமும் தன்னுடைய வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை எடுத்து வைத்து விட்டு எதையுமே சொல்லாமல் அங்கிருந்து கிளம்பினார். இதையெல்லாம் பார்த்து சரவணன் கோபப்பட்டார். இன்னொரு பக்கம் கதிர், நீ படிக்கும் விஷயம் மட்டும் பாரு. நீ டிராவல்ஸ்க்கு வர வேண்டாம் என்றார்.

தங்கமயில் சொன்ன விஷயத்தால் பாண்டியன் எடுத்த முடிவு, கோபப்படும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

நேற்று எபிசோட்டில் ராஜி, மீனா வீட்டை விட்டு போவதை நினைத்து ரொம்ப எமோஷனலாக பேசியிருந்தார். உடனே மீனா, நான் எங்கும் போகவில்லை என்றார். கதிர், செந்திலுக்கு சப்போர்ட் செய்து தான் பேசினார். பின் மீனா, வேண்டும் என்றால் உங்கள் அண்ணனுடன் சேர்ந்து நீங்கள் அந்த வீட்டுக்கு போய் விடுங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கடையில் மாணிக்கம் செய்த வேலையால் கொந்தளித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போட்டார். தங்க மயிலின் குடும்பத்தை பற்றியும் அவருடைய அப்பா செய்த வேலையையும் கேவலப்படுத்திக் கொண்டிருந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இதனால் தங்கமயில், எங்க அப்பா ஒன்னும் பணம் திருட மாட்டார் என்றெல்லாம் பேசினார். சரவணன், இனி உன் அப்பா கடை பக்கமே வரக்கூடாது என்று திட்டினார். அதற்குப்பின் பழனி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்ப வந்த பாண்டியன், கடைக்கு பழனியை போக சொன்னார். பழனியும் வேகவேகமாக கிளம்பினார். இதை பார்த்து கோபப்பட்ட சுகன்யா, சக்திவேலிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பழனிக்கு சொந்தமாக பிசினஸ் ஏற்பாடு செய்து தரச் சொல்லிக் கேட்டார். சக்திவேல், பழனியை அழைத்துக்கொண்டு இங்கே வந்துவிடு எல்லாமே செய்து தருகிறேன் என்றார்.

தங்கமயில் சொன்ன விஷயத்தால் பாண்டியன் எடுத்த முடிவு, கோபப்படும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிச்சனில் எல்லோருமே வேலைக்கு போவதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமதி, தங்கமயில் வேலைக்கு போகாமல் இருப்பதை சூசகமாக சொல்கிறார். இதனால் தங்கமயில் அங்கிருந்து சென்று விடுகிறார். பின் தங்கமயில், சரவணன் இடம் சண்டை போடுகிறார். அதற்கு சரவணன், நீ என்ன படித்திருக்கிறாய்? பொய் சொல்லி தானே ஏமாற்றுகிறாய் என்று திட்டுகிறார். அதற்குப்பின் தங்கமயில் தன்னுடைய அப்பாவிற்கு ஃபோன் செய்து, மளிகை பொருட்களை எடுத்து வந்ததை பற்றி கேட்டு சண்டை போடுகிறார்.

தங்கமயில் சொன்ன விஷயத்தால் பாண்டியன் எடுத்த முடிவு, கோபப்படும் சரவணன் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சீரியல் ட்ராக்:

அவரும் சம்பளம் கொடுத்தவுடன் திருப்பிக் கொடுக்கிறேன் என்று சமாளிக்கிறார். அதற்குப்பின் பாண்டியன், வீட்டில் எல்லோருமே வேலைக்கு தயாராகி கிளம்புகிறார்கள் செந்தில் கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு வீட்டிலேயே அட்ராசிட்டி செய்து கொண்டிருக்கிறார். அதற்குப்பின் தங்கமயில், நான் வெளியே வேலைக்கு போவதில் நிறைய பிரச்சனை இருக்கிறது. நான் மளிகை கடைக்கு வேலைக்கு வருகிறேன் என்று சொல்கிறார். சரவணன், கோமதி, பாண்டியன் எல்லோருமே வேணாம் என்கிறார்கள். ஆனால், தங்கமயில் விடாமல் ஏதேதோ கதைகளை கட்டுகிறார். பாண்டியன், தங்கமயிலின் வற்புறுத்ததால் ஒத்துக்கொள்கிறார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது

தலைப்புகள்
#pandian stores 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2#பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 லேட்டஸ்ட்#pandian stores 2 latest
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement