Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.10.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பல லட்சம் ரூபாய் மதிப்பில் வைர நகை வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - காரணம் இது தானம்

எழுதியவர்subhashini25 அக்டோபர், 2022 அன்று 12:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை மீனா பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை வாங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் வகுத்து வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியல் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் வைர நகை வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - காரணம் இது தானம்

அதோடு இந்த சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்து இப்போது வரை விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கிறது. அதனால் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறார்கள். சமீபத்தில் தான் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த காவ்யா சினிமா வாய்ப்பு காரணமாக சீரியலில் இருந்து விலகி இருந்தார். தற்போது முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடித்து வருகிறார். தற்போது சீரியலில் தாங்கள் வாங்கும் புது இடத்தை பதிவு செய்யும் முயற்சியில் மூர்த்தி இறங்கி இருக்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்:

இன்னொரு பக்கம், கதிர் - முல்லை நடத்தும் ஹோட்டல் நன்றாக சென்று கொண்டிருக்கின்றது. அது மட்டுமில்லாமல் புதிதாக நடக்க இருக்கும் சமையல் போட்டியிலும் கலந்துகொள்ள கதிரும் முல்லை செல்ல இருக்கிறார்கள். இப்படி பல திருப்பங்களுடன் சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் ஹேமா. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை. இவருக்கு சிறு வயதிலிருந்தே மீடியாவின் மீது அதிக ஆர்வம் உடையவர்.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் வைர நகை வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - காரணம் இது தானம்

ஹேமா குறித்த தகவல்:

இவர் எம்சிஏ படித்து முடித்த பிறகு சைதாப்பேட்டை போலீஸ் காவல் நிலை அலுவலகத்தில் ஹார்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து இருந்தார். அதற்கு பின்னர் இவர் வசந்த் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதன் பின்னர் இவர் பல சேனல்களில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தும் இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்தார். இதை தொடர்ந்து இவர் மெல்ல திறந்தது கதவு, சின்ன தம்பி என பல சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் வெள்ளித்திரையில் நடித்து இருக்கிறார்.

ஹேமா நடிக்கும் சீரியல்:

தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவர் முதல் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிலும் இவர் சீரியலில் காமெடி, வில்லி, நல்லவர் என மூன்றும் கலந்த கலவையாக கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய இயல்பான பேச்சும் நடிப்பும் இந்த சீரியலுக்கு கூடுதல் பலம் என்று சொல்லலாம். இது ஒரு பக்கமிருக்க, ஹேமா அவர்கள் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அதில் அவர் பல வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார்.

பல லட்சம் ரூபாய் மதிப்பில் வைர நகை வாங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை - காரணம் இது தானம்

நடிகை ஹேமா வாங்கிய வைர நகை:

இந்நிலையில் நடிகை ஹேமா வைர நகை ஒன்று வாங்கி இருக்கிறார். அதன் மதிப்பு ஒன்பது லட்சம் ரூபாய். இது குறித்து அவர் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். அதில், ஒரு வைர கம்மல் வாங்குவது என்பது என்னுடைய வாழ்நாளில் பெரிய கனவாக இருந்தது. ஒருவர் உழைத்து சொந்தமாக விலை உயர்ந்த ஒரு பொருள் வாங்கும் போது மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த சந்தோஷத்தை நானும் அடைந்திருக்கிறேன் என்று கூறி வைர நகை வாங்கும் போது எடுத்த வீடியோவையும் தன்னுடைய சேனலில் இவர் பதிவிட்டிருக்கிறார்.

தலைப்புகள்
#பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா#Pandiyan Stores Serial#ஹேமா#பாண்டியன் ஸ்டோர்ஸ்#Hema#pandiyan stores meena
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement