Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aaj
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.05.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

ஜி.பி.முத்து ஒழிக, அவனால தான் எங்களுக்கு பிரச்சனை - எதிராக கிளம்பிய மொத்த ஊர், போலீஸ் நடவடிக்கை

எழுதியவர்subhashini14 மே, 2025 அன்று 09:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

டிக்டாக் நண்பர்களே என்ற வார்த்தையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஜி பி முத்து. இவரது நெல்லை பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று எல்லா சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானார். ஸ்டூடியோ கிடையாது , கவர்ச்சி புகைப்படம் கிடையாது, மேக்கப் கிடையாது , வித விதமான துணி கிடையாது, பார்வையாளர்களை சப்ஸ்கிரைப் செய்ய சொல்வது கிடையாது, இருப்பினும் இவரது யூடுயூப் சேனல் வேகமாக வளர்கிறது.

ஜி.பி.முத்து ஒழிக, அவனால தான் எங்களுக்கு பிரச்சனை - எதிராக கிளம்பிய மொத்த ஊர், போலீஸ் நடவடிக்கை

மேலும், யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தான் இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. அதோடு ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருந்தது. ஆரம்பத்தில் ஜிபி முத்து நன்றாக தான் விளையாடி இருந்தார்.பின் இவர் குடும்பத்தின் மீது இருந்த ஏக்கத்தின் காரணமாக தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். இது பலருக்குமே ஷாக்கை கொடுத்தது. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜி.பி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் ஏகப்பட்ட நிகழ்ச்சியிலும் கலந்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து:

இதை அடுத்து இவர் சினிமாவிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரத்தில் ஜி.பி முத்து வசித்து வருகிறார். அங்குள்ள சில பேருடைய ஆக்கிரமிப்பால் கீழ்தெரு என்ற பகுதி காணாமல் போனதாகவும், கோயிலுக்கு சொந்தமான இடத்தை கடந்த 20 ஆண்டுகளில் தனிநபர்கள் முழுவதுமாக ஆக்கிரமித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக ஜி.பி முத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருக்கிறார். அதில் அவர், பெருமாள்புரத்தில் கீழ் தெரு என்று ஒரு தெரு இருந்தது. ஒரு இடம் முழுக்க அரசு புறம்போக்கு பாதியாக பொதுமக்கள் பயன்படுத்தி இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=zh-TrdhGtZg

ஜி.பி.முத்து அளித்த புகார்:

இது வருவாய் துறை ஆவணங்களிலும் இருக்கிறது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமமே காணாமல் போனது. அதேபோல் பெருமாள்புரத்தில் கீழ் தெரு என்ற ஒரு தெருவே காணாமல் போய்விட்டது. அதை முழுக்க பல்வேறு தனிநபர்களால் ஆபர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் செல்லும் பாதை அடைக்கப்பட்டு இருக்கிறது. அது தொடர்பான டாக்குமெண்ட் எல்லாமே என்னிடம் இருக்கிறது. இதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து இவர் அளித்த பேட்டியில், கோயில் சொத்தை விற்க யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால், எங்கள் கோயில் சொத்தை வீற்றிருக்கிறார்கள். அதோடு என் வீட்டுக்கு வரும் என்னுடைய சொந்த பாதையையுமே அடைத்திருக்கிறார்கள்.

ஜி.பி.முத்து பேட்டி:

ஒரு தனிப்பட்ட நபர் தனது சொந்த பகை காரணமாகவே அவருடைய குடும்பத்தோடு சேர்ந்து அராஜகம் செய்கிறார். அந்த தனிப்பட்ட நபரால் என்னுடைய குடும்பத்திற்கு தொடர்ந்து பிரச்சனைகள் வருகிறது.
என்னுடைய குடும்பத்தினரை தகாத வார்த்தைகளும் திட்டுகிறார். எல்லோருமே நடவடிக்கை எடுப்பதாக சொல்கிறார்கள். ஆனால், யாருமே எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. கீழ்தெருவை அதிகாரிகள் தான் கண்டுபிடித்து தரணும். அதுக்காக தான் மனு கொடுக்க வந்திருக்கிறேன். நான் ஆறு வருஷமாக இதுக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். சில நாட்களில் தண்ணீர் அடித்து விட்டு எல்லாம் பிரச்சனை செய்தார்கள். நான் அதை எல்லாம் நான் ரெக்கார்ட் செய்து வைத்திருக்கிறேன். 20 அடி பொதுபாதையை இல்லாமல் செய்திருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=0oxQX59319o

போலீஸ் விசாரணை:

என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் தான் இப்படி செய்கிறார்கள். என் சோலியை முடிக்கணும் என்பதே குறிக்கோளாக இருக்கிறார்கள். இனியும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்தோடு தீக்குளிப்பேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஜி.பி முத்து அளித்த புகாரின் பேரில் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஜி.பி முத்துவின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அந்த பகுதியிலேயே பெரும் பரபரப்பு நிலவியது. இதனால் ஜி.பி முத்து வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பின் ஊர் மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறார்கள். அந்த இடத்திற்கு ஜி.பி முத்து வந்தார். உடனே அங்கிருந்த மக்கள் ஜி.பி முத்து ஒழிக என்று கோஷமெல்லாம் போட்டு இருக்கிறார்கள். இதை அடுத்து போலீசார் ஜி.பி முத்துவை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறது. அதற்குப் பிறகு ஊர் போலீஸிடம் ஊர் மக்கள், ஜி பி முத்து விளம்பரத்திற்காக தான் இந்த செயல்களை செய்து கொண்டிருக்கிறார். கோவிலை அதற்குரிய இடத்தில்தான் புதுப்பித்து கட்டுவதாக கூறியிருக்கிறார்கள்.

தலைப்புகள்
#Youtuber G P Muthu#ஜி.பி.முத்து#g p muthu movie#ஜி.பி.முத்து புகார்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement