Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'ஒரு கன்னடரா' - சித்தார்த்தை வெளியேற செய்த கன்னட அமைப்பினர்கள் விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் பதிவு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.09.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'ஒரு கன்னடரா' - சித்தார்த்தை வெளியேற செய்த கன்னட அமைப்பினர்கள் விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் பதிவு.

A
எழுதியவர்Arun29 செப்டம்பர், 2023 அன்று 12:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சித்தா படத்தின் பிரஸ் மீட்டிங்கில் கன்னட அமைப்பினர் பிரச்சனை செய்து சித்தார்த்தை மிரட்டி வெளியேற்றிருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் பின்னணி பாடகர், திரைக்கதை, எழுத்தாளர் என பன்முகம்கொண்டவர். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

'ஒரு கன்னடரா' - சித்தார்த்தை வெளியேற செய்த கன்னட அமைப்பினர்கள் விவகாரம் குறித்து பிரகாஷ் ராஜ் பதிவு.

சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பிரஸ் மீட்டில் நடந்தது:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை பற்றி இந்த படம் பேசியிருக்கிறது. மேலும், இந்த படத்தை கன்னடத்தில் சிக்கும் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் அவர்கள் கர்நாடகாவிற்கு சென்று இருக்கிறார். பின் பெங்களூரு எஸ் ஆர் வி திரையரங்கில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு சித்தார்த் பேசியிருக்கிறார். அப்போது கழுத்தில் சிவப்பு- மஞ்சள் நிற துண்டு போட்ட கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் பிரஸ்மீட்டிற்குள் நுழைந்து இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=n_Rg4wLlQzg

கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் மிரட்டல்:

அப்போது மேடையில் சித்தார்த் தனியாக அமர்ந்து கொண்டு படம் குறித்து பேசி இருக்கிறார். இதை பார்த்த கன்னட ரக்ஷா வேதிகா அமைப்பினர் சித்தார்த்தை மிரட்டி இருக்கின்றனர். பின் அந்த அமைப்பினர், தண்ணீர் தமிழ்நாட்டுக்கு போகிறது. நீங்கள் படம் பத்தி பேசுகிறீர்களா? என்று சித்தார்த்தை பார்த்து ஆவேசமாக பேசி இருக்கின்றனர். இருந்தாலும் முதலில் சித்தார்த் கண்டுகொள்ளாமல் அமைதியாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மேடைக்கு முன் நின்று சத்தம் போட்டு இருக்கிறார்கள்.

வைரலாகும் வீடியோ:

பின் இப்போது இந்த படம் தேவையா? தமிழ் படத்தை பற்றி இப்போது இங்கு பேசணுமா? நீங்கள் எல்லோரும் வெளியில் வந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொடுக்கக் கூடாது என்று போராடுங்க. அதை விட்டு படத்தைப் பற்றி பேசுவதா? ஆர்டர் போட நாங்க வரல. ஆனா கோரிக்கையா கேட்கிறோம் என்று கோஷமிட்டு பேசி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த அமைப்பினர் சித்தார்த்தை தொடர்ந்து வெளியேறுமாறு மிரட்டி இருக்கின்றனர். பின் சித்தார்த் அங்கிருந்து வெளியேறினார்.

Instead of questioning all the political parties and its leaders for failing to solve this decades old issue.. instead of questioning the useless parliamentarians who are not pressurising the centre to intervene.. Troubling the common man and Artists like this can not be… https://t.co/O2E2EW6Pd0

— Prakash Raj (@prakashraaj) September 28, 2023

பிரகாஷ் ராஜ் பதிவு :

இந்த சம்பவம் தொடர்பாக பல நடிகர்கள் மௌனம் சாதித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரகாஷ் ராஜ் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் 'பல தசாப்தங்கள் பழமையான இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறிய அனைத்து அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத பயனற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, சாமானியர்களையும், கலைஞர்களையும் இப்படித் தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடரா,கன்னடர்கள் சார்பாக, மன்னிக்கவும் சித்தார்த்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#siddharth#Actor Prakash Raj#Chithaa#சித்தார்த்#Prakash Raj
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement