Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராஜா ராணி சீரியலில் இருந்து விலகிய '2' நடிகைகள்..? வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!யார் தெரியுமா ?

A
எழுதியவர்Ajju20 மே, 2018 அன்று 12:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ராஜா ராணி' சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்டில், இந்த ஆண்டின் சிறந்த சீரியலுக்கான விருதையும் இந்த சீரியல் பெற்றது. இந்த சீரியலில், இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகைகள் விலகியிருப்பது, ரசிகர்களிடம் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. 'தங்களுக்குப் பிடித்தமான இவர்களை மிஸ் செய்வதாகப் பலரும் சமூக வலைதளத்தில் பதிவுகளை அள்ளித் தெளித்துள்ளனர். அவர்கள் ஏன் விலகினார்கள்? என்ன ஆயிற்று எனத் தெரிந்துகொள்ள அவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். raja-rani-serial வைஷாலி தனிகா: ராஜா ராணி' சீரியலின் வினோ கேரக்டர் எனக்குப் பயங்கர ரீச் கொடுத்துச்சு. அந்த சீரியலால் நிறைய ஃபேன்ஸ் கிடைச்சிருக்காங்க. ஒரு வருஷம் அதில் ஒர்க் பண்ணியிருக்கேன். கோ-ஆர்ட்டிஸ்ட் எல்லோருடனும் நான் பயங்கர குளோஸ். செட்டில் எப்பவும் துருதுருனு இருப்பேன். எல்லோரும் ஃபேமிலி மாதிரியே பழகுவோம். எனக்கு ஹெல்த் இஷ்யூ இருக்கிறதால் டாக்டர்ஸ் மூணு மாசம் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. சீரியலில் என் கேரக்டருக்கு பிரேக் விடமுடியுமான்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். 'இல்லைம்மா, இந்த கதாபாத்திரம் தொடர்ந்து இருக்கணும்'னு சொல்லிட்டார். அதனால், சீரியலிலிருந்து விலகவேண்டியதாயிடுச்சு. இது என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, என்னோடு நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளுக்கும் ஷாக்கிங்கா இருந்துச்சு. நான் யார்கிட்டேயும் சொல்லலை. 'ராஜா ராணி' டீமை ரொம்பவே மிஸ் பண்றேன். இன்ஸ்டாவில் போனாலே நிறைய பேர் திரும்பவும் வாங்கன்னு சொல்றாங்க. 'நீங்க நடிக்கலைன்னா, நாங்க அந்த சீரியலைப் பார்க்கமாட்டோம்'னு சிலர் சொல்றாங்க. அப்படியெல்லாம் பண்ணாதீங்க. அந்த கேரக்டரில் புதுசா வந்திருக்கிறவரும் சூப்பரா நடிப்பாங்க. அவங்களை சப்போர்ட் பண்ணுங்க. நடிக்கத் தெரியாத என்னையே டைரக்டர் நடிக்கவெச்சுட்டார். அவங்க ஏற்கெனவே நல்ல ஆர்ட்டிஸ்ட். அவங்களை நீங்க விரும்பும் வினோவாக டைரக்டர் கொண்டுவந்திருவார். மூணு மாசம் ரெஸ்ட்டுக்குப் பிறகு இதே சீரியலில் ரீ-என்ட்ரி கொடுப்பேனான்னு தெரியலை. ஆனால், சீரியல்களில் தொடர்ந்து நடிப்பேன். அதுவரை சோஷியல் மீடியாவில் பார்க்கலாம். அதுமட்டுமில்லீங்க... நான் நடிச்ச 'சீம ராஜா' படத்தையும் பார்த்துட்டு உங்க சப்போர்ட்டை எனக்குக் கொடுங்க. மிஸ் யூ ஆல்... மிஸ் யூ 'ராஜா ராணி'' டீம்!' vaishali6thanika பவித்ரா: ஆரம்பத்தில் என் முகத்துக்கு நெகட்டிவ் செட்டாகுமானு தயக்கமா இருந்துச்சு. என்னை நம்பி அந்தக் கதாபாத்திரத்தைக் கொடுத்த டைரக்டருக்காகவே, நல்லா நடிக்கணும்னு நினைச்சேன். அதேமாதிரி எல்லோரும் பாராட்டும் அளவுக்கு 'திவ்யா' கேரக்டர் பண்ணினேன். என்னுடன் பழகும் ஃப்ரண்ட்ஸ் கூட என் நடிப்பைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. அந்த அளவுக்கு 'ராஜா ராணி' எனக்கு முக்கியமான அங்கீகாரம் கொடுத்துச்சு. அதிக ஆர்வத்துடன் ஒவ்வொரு சீனும் பார்த்துப்பார்த்து நடிச்சேன். ஆனால், இதே சேனலில் வேற ஒரு சீரியலில் உடனடியாக நடிக்கும் சூழல். அதனால், இதிலிருந்து விலகவேண்டியதாயிடுச்சுங்க. சீக்கிரமே வேற ஒரு சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் என்னைப் பார்க்கலாம். அதுவரை மிஸ் யூ ஆல்! pavithra இந்த இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே நேரத்தில் விலகியதால், சீரியலில் சின்ன வெற்றிடம் தோன்றியிருப்பது நிஜம்தான். ஆனால், புதிதாகக் களம் இறங்கியுள்ளவர்கள் அந்த வெற்றிடத்தைப் பூர்த்திசெய்வார்களா எனப் பார்க்கலாம்.
தலைப்புகள்
#பவித்ரா#வைஷாலி#pavithra#viashali#raja rani#ராஜா ராணி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement