Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பேராசையால் பறிபோன சீரியல் வாய்ப்பு - பூவே உனக்காக சீரியலில் இருந்து இவர் விலகியதற்கு இதான் காரணமாம்.

எழுதியவர்Rajkumar14 பிப்ரவரி, 2022 அன்று 11:56 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியை போல சன் தொலைக்காட்சியிலும் சினிமா டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. வானத்தை போல. பூவே உனக்காக, ரோஜா என்று சினிமா டைட்டிலில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் சன் டிவியின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் வெற்றிகரமாக 250 எபிசோடுக்கு மேல் கடந்து இருக்கிறது. இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் இந்த சீரியலின் நாயகனாக நடித்த அருண் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டதாக அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

பேராசையால் பறிபோன சீரியல் வாய்ப்பு - பூவே உனக்காக சீரியலில் இருந்து இவர் விலகியதற்கு இதான் காரணமாம்.

இதுகுறித்து தெரிவித்த அவர், பூவே உனக்காக சீரியலில் இருந்து நான் விலகி இருப்பதை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை இனி கதிராக உங்களால் என்னை பார்க்க முடியாது. இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்த என்னுடைய தயாரிப்பாளருக்கும் சன் டிவிக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வந்த ரசிகர்களுக்கு நன்றி. விரைவில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியுடன் சந்திப்பேன்.

விலகிய ராதிகா :

உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் எனக்கு தேவை என்றும் உங்கள் அன்புடன் அருண் என்று பதிவிட்டு இருந்தார்.இப்படி ஒரு நிலையில் அவருக்கு பதிலாக விஜய் டிவியில் பல சிரியல்களில் நடித்த அஸீம் கமிட் ஆகி இருக்கிறார்.அசீம் வந்த பின்னர் இந்த சீரியல் Trpயில் படு அதிகம் எகிறியது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் பூவரசி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த ராதிகா பிரீத்தி இந்த தொடரில் இருந்தார்.

பேராசையால் பறிபோன சீரியல் வாய்ப்பு - பூவே உனக்காக சீரியலில் இருந்து இவர் விலகியதற்கு இதான் காரணமாம்.

இதுகுறித்து ராதிகா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாகவது ' கனத்த இதயத்தோடு பூவே உனக்காக தொடரில் இருந்து நான் விலகியிருப்பதை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த சன் டிவிக்கும், புரொடக்‌ஷன் ஹவுஸூக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக என் வாழ்க்கையில் நடக்கும் அடுத்தடுத்த வெற்றிப்படிகளில் என்னுடன் இருப்பீர்கள் என எனக்குத் தெரியும்! உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்!.. இப்படிக்கு, பூவரசி!' என கூறி இருந்தார்.

சம்பளத்தால் ஏற்பட்ட பிரச்சனை :

இப்படி ஒரு நிலையில் அவர் வெளியேறியதற்கான வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள் கூறுகையில், சமீபத்தில் அந்த சீரியல் ஹிட் ஆனதற்கு தான் மட்டுமே காரணம் என்று நினைத்த ராதிகா தன்னுடைய சம்பளத்தை கூட்டி கேட்டுள்ளார், ஆனால், அதற்கு சீரியல் குழு மறுத்ததால், தான் சீரியலை விட்டு வெளியேறுவதாக கூறுகிறார். இவரின் இந்த முடிவை கேட்டதும் அவர்கள் சம்பளத்தை உயர்த்துவார்கள் என்று ராதிகா எதிர்பார்த்தார்.

பேராசையால் பறிபோன சீரியல் வாய்ப்பு - பூவே உனக்காக சீரியலில் இருந்து இவர் விலகியதற்கு இதான் காரணமாம்.
புதிய பூவரசி வர்ஷினி

ராதிகாவிற்கு பதில் வந்த வர்ஷினி :

ஆனால், டக்கென்று போகனும்னா போங்க இன்று சீரியல் குழு சொன்னதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. தன்னுடைய விலகலை அறிவித்த அந்தப் பதிவி கூட 'பூவரசி'ன்னு தன்னுடைய கேரக்டர் பெயரை அவர் குறிப்பிட்டிருந்ததைக் கவனிச்சீங்களா? 'கொஞ்சம் அவசரப் பட்டுட்டோமோ'னு இப்போது அவர் நினைக்கறதா சொல்றாங்க என்று கூறி இருக்கிறார். ராதிகா வெளியேறியதை தொடர்ந்து தற்போது அவருக்கு பதிலாக சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் நடித்த வர்ஷினி கமிட் ஆகி இருக்கிறார்.

தலைப்புகள்
#ராதிகா ப்ரீத்தி#Poove Unakaga#Radhika Preethi#பூவே உனக்காக
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement