Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

றெக்க கட்டிப் பறக்குது மனசு' சீரியலில் விலகிய வந்தனா.! அவருக்கு பதில் நிஷா.! அவரே சொன்ன காரணம்.!

A
எழுதியவர்Ajju24 ஜூலை, 2018 அன்று 10:44 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரில் வில்லியாக வந்து அதகளம் செய்துகொண்டிருந்த வந்தனா, தொடரிலிருந்து வெளியேற, அந்த இடத்துக்கு வந்துள்ளார் நிஷா. சீரியல்களில், 'இவருக்குப் பதில் அவர், இவருக்குப் பின்னால் இவர்' எனப் பல கதைகள் கிளம்புவதுண்டு. சில நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட தொடரின் ஷூட்டிங்ஸ்பாட் சூழல் பிடிக்காமல்கூட தாங்களாகவே வெளியேறுகிறார்கள். சிலர், தயாரிப்பு தரப்புடன் முரண்பட்டு விலகுகிறார்கள். vandhana actress சிலர், சேனல்களின் நிர்பந்தத்தால் வெளியேற்றப்படுகிறார்கள். சிறுசிறு கேரக்டர்களில் நிகழ்கிற ஆள் மாற்றங்கள் பெரும் விளைவுகளை உண்டாக்குவதில்லை. ஆனால், முக்கியமான கதாபாத்திரங்கள் மாறும்போது, சில நாள்களுக்காவது அதுபற்றி பேசப்படுகிறது. வந்தனா விஷயத்தில் நடந்தது என்ன? அவரிடமே பேசினேன். கல்யாணம் முதல் காதல் வரை' சீரியல்ல என்னோட நெகட்டிவ் ரோல் நல்ல ரீச். அதைப் பார்த்துட்டு, 'றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடருக்குக் கூப்பிட்டாங்க. சீரியல் நல்லாதான் போயிட்டிருந்தது. எந்த சீரியல்ல கமிட் ஆனாலும் ஆரம்பத்திலேயே என்னோட தேவைகளை கிளீயரா சொல்லிடுவேன். 'அவுட்டோர் ஷூட் போகமாட்டேன்ங்கிறதையும் சொல்லி, அதெல்லாம் சரிபட்டு வர்ற பட்சத்துல மட்டுமே சீரியல்ல கமிட் ஆகிட்டு வர்றேன். இந்த சீரியல் கமிட் ஆனப்போவும் எல்லாம் பேசினதுதான். ஆனா, சீரியல் தொடங்கிய சில மாதங்களிலேயே பேமென்ட், ஷூட்டிங் டைம் தொடர்பா எனக்கு சில சங்கடங்கள் நேர்ந்தன. அவை, தானாகவே சில நாள்கள்ல சரியாகும்னு நினைச்சேன். புரொடக்‌ஷன் சைடுல என் பிரச்னைகளைச் சொன்னேன். ஆனா, சங்கடங்கள் சரியாகுற மாதிரியே தெரியலை. குறைந்தபட்சம் என் நியாயமான கோரிக்கையை காதுகொடுத்துக் கேட்கக்கூட யாரும் தயாரா இல்லைங்கிறதை போகப்போக புரிஞ்சுக்கிட்டேன். ஷூட்டிங் நடக்குறதே மாசத்துல பாதி நாள்தான். அந்த உழைப்புக்கான ஊதியமும் சரியான நேரத்துக்குக் கிடைக்காமப்போனா, என்ன சொல்றது? சம்பளத்தைக் கேட்காம இருந்தா நடிச்சுக்கிட்டே இருக்கலாம் போல! கேட்டா, எரிச்சலாகி 'இவருக்குப் பதில் இவர்'னு அவங்களாகவே ஆளை மாத்தக்கூட செஞ்சிருப்பாங்க. அதனாலதான், முந்திக்கிட்டு நானே வெளியேறிட்டேன். sameera அதாவது, வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுட்டேன்னு சொல்லலாம். அதுக்குப் பிறகும்கூட கன்வின்ஸ் பண்ணி தொடர்ந்து நடிக்கச் சொல்லி கேட்டாங்க. ரெண்டு மாதம் மூணு மாதம் கழிச்சுதான் சம்பளம்... அதிலும் பேமென்ட் பாக்கினு போனா எப்படிங்க தொடர்ந்து இந்த சீரியல்ல வொர்க் பண்ண முடியும்'' என்கிறார், வந்தனா. றெக்க கட்டிப் பறக்குது மனசு' தொடரின் ஹீரோயின் சமீராதான், தொடரின் தயாரிப்பாளரும்கூட! 'பகல் நிலவு' தொடரில் நடித்த நிஜ காதல் ஜோடியான அன்வர் - சமீரா இருவரும் ஆளுக்கொரு தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, ஆளுக்கொரு சீரியலைத் தயாரித்து வருகிற நிலையில், (வேறு வேறு சேனலில்) மேற்படி இரண்டு நிறுவனங்களின் மீதும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதாகக் கிசுகிசுக்கிறது, சின்னத்திரை உலகம். sameera அன்வர் தயாரிக்கும் 'பொன்மகள் வந்தாள்' தொடர் ஆரம்பித்த ஐந்தே மாதங்களில், இரண்டு இயக்குநர்கள் மாறிவிட்டார்கள். ஹீரோயினை மாற்றியிருக்கிறார்கள். வெளியேறிய ஹீரோயின், தான் உடை மாற்றிக்கொண்டிருந்த அறையில் இயக்குநர் அத்துமீறி நுழைந்ததாகத் தயாரிப்பு தரப்பில் புகார் சொன்னால், கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் கூறிச் சென்றுள்ளார். வந்தனா கூறிய கருத்துகள்குறித்து சமீராவிடம் கேட்டபோது, 'ஆமா, அவங்க இப்போ நடிக்கலை' என்றவர், 'பிறகு பேசுகிறேனே!' என்றார். மீண்டும் நாம் முயற்சித்தபோது, நம் அழைப்பை அவர் ஏற்கவில்லை.
தலைப்புகள்
#Rekka Katti Parakuthu Manasu#சமீரா#வந்தனா#Vandhana#sameera#ரெக்கை கட்டி பறக்குது மனசு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement