Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
K1 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சூர்யா அரசியலுக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு- சூர்யா 45 இயக்குனர் RJ பாலாஜி பேச்சு

எழுதியவர்Rajkumar27 அக்டோபர், 2024 அன்று 07:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'கங்குவா' இசை வெளியீட்டு விழாவில் சூர்யா குறித்து ஆர்.ஜே.பாலாஜி பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’.

சூர்யா அரசியலுக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு-  சூர்யா 45 இயக்குனர் RJ பாலாஜி பேச்சு

இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார்.

கங்குவா படம் :

அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அக்டோபர் 10-ஆம் தேதியே இந்த படம் திரையரங்களில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரீலிஸ் தள்ளிப்போனது. பின் இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரைலர் இருக்கிறது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார்.

சூர்யா அரசியலுக்கு வந்து ரொம்ப வருஷம் ஆச்சு-  சூர்யா 45 இயக்குனர் RJ பாலாஜி பேச்சு

படம் குறித்த தகவல்:

போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கங்குவா இசை வெளியீட்டு விழாவில், நடிகர் சூர்யா குறித்து ஆர்.ஜே பாலாஜி பேசியிருந்தார். அதில், நான் காலேஜ் படிக்கும்போது சூர்யா சாரின் 'காக்க காக்க' படம் வந்தது. சூர்யா சார் நடித்து நான் பார்த்த முதல் படம் அதுதான். அந்தப் படத்தை தொடர்ந்து பிதாமகன், ஆயுத எழுத்து, கஜினி என நாலு படத்தையும் நான் காலேஜ் படிக்கும்போது பார்த்தேன். இப்படி திரையில் நான் பார்த்து வியந்த ஒரு நடிகர் தான் சூர்யா. இதே நேரு ஸ்டேடியத்தில் தான் நான் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன். தற்போது சூர்யாவின் 45 திரைப்படத்தை இயக்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

சூர்யா 45 குறித்து:

சூர்யா 45 போஸ்டர் சோசியல் மீடியாவில் வெளியானதும், 'What are you cooking bro?' என்று கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு எல்லாம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். சூர்யா 45 படம் பயங்கரமாக மாஸாக சமைத்து அடுத்த வருடம் உங்களிடம் தரப்படும். அதற்கு நான் கேரண்டி என விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதை தொடர்ந்து பேசி ஆர்.ஜேபாலஜி, நான் சூர்யாவின் ரசிகன் என்பதால் இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். ஒரு அரசியல்வாதி என்பது வெறும் தேர்தலில் இருப்பது மட்டுமல்ல.

https://www.youtube.com/watch?v=oa8FG0ONGOE

சூர்யா குறித்து ஆர்.ஜே பாலாஜி:

ஒரு தெருவில் மரம் விழுந்து விட்டால், அதை 4 பேராக சென்று அப்புறப்படுத்தி எடுத்து போடுபவரும் ஒரு அரசியல்வாதி தான். மக்களுக்கு நலம் செய்ய வேண்டும் என்று சிறிய எண்ணம் தோன்றி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் அவரும் அரசியல்வாதி தான். அந்த வகையில் சூரியா சார் அரசியல்வாதியாக மாறி பல வருஷம் ஆகிறது. இந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். அகரம் அறக்கட்டளை மூலமாக பல பேரை படிக்க வைத்து சூர்யா சார் 25 வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இந்த அரசியலை அவருக்கு போதுமானது என ஆர்ஜே பாலாஜி பேசியுள்ளார்.

தலைப்புகள்
#கங்குவா#Kanguva#Suriya 45#RJ பாலாஜி#சூர்யா#Suriya#rj balaji
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement