Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
K1 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எனக்கும் கமலுக்கும் ஒரு ஹைலைட் சீன் இருக்கு - 'இந்தியன் 3' புதிய அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

எழுதியவர்Rajkumar30 ஜூன், 2024 அன்று 11:42 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'இந்தியன் 2' படத்தில் தனக்கும் கமலுக்கும் இடையிலான காட்சியை பற்றி நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ள தகவல்தான் இப்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமல்ஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் கமலஹாசன். கடைசியாக இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

எனக்கும் கமலுக்கும் ஒரு ஹைலைட் சீன் இருக்கு - 'இந்தியன் 3' புதிய அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் தான் 'இந்தியன் 2'. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன் ' படம் சூப்பர் ஹிட் கொடுத்திருந்தது. இதனால் இந்த படத்தில் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் 'இந்தியன் 2' படம் உருவாகி உள்ளது.

இந்தியன் 2 படம்:

'இந்தியன் 2' படத்தை லைகா நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, எஸ் ஜே சூர்யா, சமுத்திரக்கனி உள்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அனைவர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 'இந்தியன் 2' படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

"I appear for only less portions in #Indian2 but those portions will be superb🔥. There is a one Highlight portion between me and #KamalHaasan sir in #Indian3🤩. Hope you all will make it as the 1st 1000cr grosser of Tamil movie💯"
- SJSuryah pic.twitter.com/QdWbx6pTnv

— AmuthaBharathi (@CinemaWithAB) June 29, 2024

கமலுக்கு எதிராக 7 வில்லன்கள்:

சமீபத்தில் 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தசாவதாரம் படத்தைப் போல கமல் இப்படத்தில் பல தோற்றங்களில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. மேலும், இப்படத்தில் கமலுக்கு எதிராக மொத்தம் ஏழு வில்லன்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தான் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. ஒவ்வொரு வில்லனையும் ஒவ்வொரு தோற்றத்தில் சேனாதிபதி பழி வாங்கும் காட்சிகள் இப்படத்தில் அமைந்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.ஜே.சூர்யா கூறியது:

மேலும், இதில் கமல் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவுக்கு இடையிலான காட்சிகளை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனடையில் மலேசியாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் எஸ்.ஜே சூர்யா 'இந்தியன் 2' படத்தில் தான் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். அதில், 'இந்தியன் 2 படத்தில் நான் குறைவான காட்சிகளிலேயே நடித்திருக்கிறேன். ஆனால் 3 ஆம் பாகத்தில் எனக்கும் கமலுக்கும் இடையில் ஒரு ஹைலைட்டான காட்சி உள்ளது. ரசிகர்கள் இந்த படத்தை தமிழ் சினிமாவின் முதல் ஆயிரம் கோடி வசூல் படமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

எனக்கும் கமலுக்கும் ஒரு ஹைலைட் சீன் இருக்கு - 'இந்தியன் 3' புதிய அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா

இந்தியன் 3:

இந்நிலையில் இந்தியன் படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பை இயக்குனர் சங்கர் முடித்துள்ளார். இரண்டாம் பாகம் வெளியான அடுத்த சில மாதங்களிலே மூன்றாம் பாகத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 3 படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது என்றும் அனிருத் இசையமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் 2025 ஆம் வருடம், ஜனவரி மாதம் ரிலீஸ் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புகள்
#எஸ் ஜே சூர்யா#indian 3#indian 2#இந்தியன் 2
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement