Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

100 கோடி சம்பளத்தை தாண்டிய 3 ஸ்டார்ஸ் - டாப் நடிகர்களின் சம்பள விவரத்தை வெளியிட்ட பிரபல தமிழ் நியூஸ் சேனல்.

எழுதியவர்subhashini11 மே, 2022 அன்று 09:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

கோடிக்கணக்கான பணம் சர்வசாதாரணமாகப் புழங்கும் துறைகளில் பிரதானமான ஒன்று சினிமா. ஆயிரக்கணக்கில் டேட்டா வாங்கிக் கொண்டிருந்த நடிகர்கள் சினிமாவில் கிடைத்த மக்கள் செல்வாக்கின் காரணத்தால் கோடிகளில் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தில் சென்றிருக்கிறார்கள். அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் துணை நடிகராக இருந்த விஜய் சேதுபதி வரை பல முன்னணி நடிகர்களை உதாரணமாகச் சொல்லலாம். மேலும், சினிமாவில் ரசிகர்களுக்கு இடையே ஒரு புது ட்ரெண்ட் உருவாக்கியிருக்கிறது.

100 கோடி சம்பளத்தை தாண்டிய 3 ஸ்டார்ஸ் - டாப் நடிகர்களின் சம்பள விவரத்தை வெளியிட்ட பிரபல தமிழ் நியூஸ் சேனல்.

தனது ஹீரோக்களின் படங்களின் ஹிட்டை விட அந்தப் படம் எவ்வளவு கலெக்சன் செய்திருக்கிறது என்பதை கவனித்துக் கொண்டு நடிகர்களை கொண்டாடத் தொடங்கி இருக்கிறார்கள் ரசிகர்கள். எந்த நடிகர் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை பொறுத்து அவருக்கான இமேஜ் சினிமாவில் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்கிற தகவல் சினிமா வட்டாரத்தில் உலா வருகின்றது. அந்தப் பட்டியல் இதோ,

விஜய்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக தளபதி என்ற அந்தஸ்துடன் கொடிகட்டி பறப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூலில் வாரி குவித்து இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் அவர்கள் தளபதி 66 என்ற படத்தில் நடிக்கிறார். மேலும், சம்பளம் பட்டியலில் முதலாவதாக இருப்பவர் விஜய். தற்போது நிலவரப்படி விஜய் ஒரு படத்திற்கு 118 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். அட்லியின் தெறி படத்திற்கு முன்பு இவர் 20 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு இவரின் சம்பளம் கூடிக்கொண்டே சென்றதாக கூறப்படுகிறது. இவரின் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் வசூலில் பிரச்சனை இல்லை என்பதால் விஜய் கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மீது முட்டை அடித்த நடிகர்..! விஜய் என்ன கேட்டார் தெரியுமா..! - Tamil Behind  Talkies

அஜித்:

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டு இருப்பவர் அஜீத். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த வலிமை படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் ஏகே 61 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், சம்பள பட்டியலில் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அஜித். இவருக்கு லைக்கா தயாரிப்பு ஏகே 62 படத்திற்காக 105 கோடி ரூபாய் சம்பளம் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அஜித்தின் நடிப்பில் வெளியான விசுவாசம், வலிமை ஆகிய படங்கள் தமிழகத்தில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. அதைப்போல் டிஜிட்டல் தளங்களிலும் அஜித்தின் படங்கள் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. வலிமை படத்திற்கு 60 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய அஜித் அடுத்த படத்தில் 40 கோடி ரூபாய் உயர்த்தி இருக்கிறார். அதோடு சினிமாவில் மட்டுமில்லை சம்பளத்திலும் அஜீத்துக்கும் விஜய்க்கும் ஆன போட்டி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

முதன் முறையாக அஜித் எடுத்த செல்ஃபி.! சமூக வலைதளத்தில் வைரலாகும்  புகைப்படம்.! - Tamil Behind Talkies

ரஜினிகாந்த்:

என்றென்றும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியாகி இருந்த படம் அண்ணாத்த. இதனை தொடர்ந்து தலைவர் 169 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். மேலும், சம்பள பட்டியலில் விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுக்கு முன்னாடியே 100 கோடி ரூபாய் வசூலை செய்தவர் ரஜனிகந்த். அண்ணாத்த படத்திற்கு இவர் 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. அந்த இழப்பை ஈடுசெய்ய அண்ணாத்த படத்தை தயாரித்த நிறுவனம் இயக்கும் அடுத்தில் படத்தில் ரஜினி நடிக்கிறார். அதில் 20 கோடி ரூபாய் குறைத்து 80 கோடி ரூபாயாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.

Rajinikanth And Nelson In Thalaivar-169 Story Leaked| நெல்சன்

கமலஹாசன்:

உலகநாயகன் என்ற அந்தஸ்துடன் கொடி கட்டி பறப்பவர் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவின் ஐகான். ஆனால், இவரின் சம்பளம் 35 கோடி ரூபாய் என்ற அளவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் உச்ச நட்சத்திரங்களுக்கு சவால் விட்ட நடிகர். ஆனால்,சம்பள விவகாரத்தில் அவர்களை விட பின்தங்கி இருக்கிறார். விஸ்வரூபத்தை தவிர கடந்த 10 ஆண்டுகளாக கமல் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் வசூல் ரீதியாக வெற்றி அடையவில்லை. அதுவே அவரின் சம்பளம் குறைவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

சூர்யா:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் சம்பளம் 28 கோடி ரூபாய் என்று உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுவும் ஓடிடி தளத்தில் வெளியான இவரின் படங்கள் எல்லாம் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் சூர்யாவின் வியாபாரம் அதிகரித்து வருகிறது.

https://www.youtube.com/watch?v=ZY57TuxBwts

சிவகார்த்திகேயன்:

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடுமையான உழைப்பினால் தமிழ் சினிமா உலகில் நுழைந்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான், தெலுங்கில் ஒரு படம், கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படம் என்று பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் 25 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகன் செய்த வேலையை பாருங்க..! இப்படி ஒரு ரசிகனா.?  புகைப்படம் இதோ - Tamil Behind Talkies

தனுஷ்:

கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என நடிப்பின் உச்சம் அடைந்து கொண்டிருப்பவர் அசுரன் தனுஷ். தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். தனுஷின் சம்பளம் 20 கோடி என்ற தகவல் கிடைத்திருக்கிறது.

தலைப்புகள்
#அஜித்#சிவகார்த்திகேயன்#விஜய்#Rajinikanth#Surya#ரஜினிகாந்த்#கமல்ஹாசன்#Ajith#சூர்யா#தமிழ் சினிமா நடிகர்கள் சம்பளம்#Vijay
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement