Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி செய்த வடிவேல் பாலாஜி !

A
எழுதியவர்Ajju6 ஜனவரி, 2018 அன்று 08:27 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM3 நிமிட வாசிப்பு
பகிர்
கலக்கப்போவது யாரு சீசன் 4ல தான் வடிவேல் பாலாஜி அறிமுகமானார். அந்த சீசன் எதிர்பார்த்தப்படி போகலை. வடிவேல் பாலாஜி அந்த சீசனோட வின்னரா இல்லைனாலும் வெளிய தெரிஞ்சார். அதுக்குக் காரணம், அவர் வடிவேலோட எல்லா மாடுலேஷனிலும் பேசுனதுதான். வடிவேல் வாய்ஸ்னா எல்லாரும், ‘வேணா... வலிக்கிது, அழுதுருவேன்...’னு ஒரே மாதிரிதான் பேசுவாங்க. ஆனால், வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் கலக்குவார். அதுனாலதான் அவரை சீசன் 4 ஆடிஷனில் செலக்ட் செய்தோம். vadivel balajiஅவர் என்ன கான்செப்ட் கொண்டுவந்தாலும் அதோட சேர்த்து நடுவர்கள்கிட்ட பேசி, கேள்வி கேட்டு ஏதாவது பண்ணிட்டே இருப்பார். சீசன் 4ல நடுவர்களா இருந்த பாண்டியராஜன் சாரும் உமா ரியாஸ் மேடமும், ‘வடிவேல் பாலாஜிகிட்ட பார்த்துதான் பேசணும். அடுத்தடுத்து கவுன்ட்டர் கொடுத்துட்டே இருக்கார்’னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தைரியமா நடுவர்களையும் கலாய்ப்பார். கலக்கப்போவது யாரு சீசன் 4 முடிஞ்சதும் அது இது எது ஷோல கலந்துக்கிட்டார் பாலாஜி. ‘சிரிச்சா போச்சு’வோட மிகப்பெரிய பில்லரே வடிவேல் பாலாஜிதான். இதுவரைக்கும் வடிவேல் பாலாஜி யாரையும் சிரிக்க வைக்காம போனதேயில்ல. சோலோவா வந்து சிரிக்க வைக்கிறதுதான் பாலாஜியோட ஸ்பெஷல். வடிவேலோட எல்லா கெட்டப்பையும் சிரிச்சாப் போச்சுல போட்டிருக்கார். கான்செப்ட் இல்லாத டைம்ல கெஸ்டுகள்கிட்ட, ஆங்கர்கிட்ட ஏதாவது பேசி சிரிக்க வெச்சிடுவார். கெஸ்டுகளை சிரிக்க வைக்கிறதுக்காகவே சில டெம்ப்ளேட்ஸ் வச்சிருக்கார் பாலாஜி. அவர் லிப்ட்ல இருந்து வெளிய வந்ததும் சில சமயம் மூணு பேர்ல இரண்டு பேரு சிரிச்சிடுவாங்க. சிரிக்காத அந்த ஒருத்தர் பக்கத்துல போய், ‘என்ன டஃப் கொடுக்குறீயா’னு கேப்பார். அதுலையே அந்த கெஸ்ட்டும் சிரிச்சிடுவார். முன்னாடியெல்லாம் சிரிச்சா போச்சு ரவுண்டுல சிரிக்காம இருந்தா டி.வி கொடுப்பாங்க. அந்த டைம்ல வந்த எபிசோடுல யாராச்சும் சிரிக்காம இருந்தா, ‘ஒரு டிவிக்காக சிரிக்காம இருக்கியா..?, நீ அந்த டிவியை வாங்கிட்டு போகும்போதே அது சுக்கு நூறா உடைஞ்சிரும்’னு சபிப்பார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க. balajiமூணு கெஸ்ட்ல பெரும்பாலும் 2 ஆண், 1 பெண் வருவாங்க. மூணு பேருக்கும் கை கொடுக்கப்போவார். 2 ஆண்களுக்கும் கை கொடுத்துட்டு, பொண்ணுக்கு கை கொடுக்க போகும்போது மட்டும் வானத்தைப் பார்த்து, தரையைப் பார்த்து வெட்கப்படுவார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க. பாலாஜி பல சமயம் லேடி கெட்டப் போடுவார். அந்த டைம் கெஸ்ட்டா வர ஆண்கள்கிட்ட, ‘என்ன குறுகுறுனு பாக்குற’, ‘என்னய்யா உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு’, ‘நீ எதிர்பார்க்குறது என்கிட்ட இல்ல’னு சொல்லுவார். எல்லாரும் சிரிச்சிருவாங்க. இப்படி சில டெம்ப்ளேட்ஸ் வச்சுக்கிட்டு வொர்க் பண்ணுவார். வடிவேல் கெட்டப் போடுறதுக்கு சமமா லேடி கெட்டப் போடுறதுக்கும் அதிகம் ஆர்வம் காட்டுவார் பாலாஜி. லேடிஸ் என்ன என்ன யூஸ் பண்றாங்க, காஸ்ட்டியூம்ஸ் எப்படி பண்றது, மேக்கப் எப்படி பண்றதுனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணுவார். சிரிச்சா போச்சுல லேடி கெட்டப் போடுறதுக்கு பல பேர் யோசிப்பாங்க. மீசை, தாடியை எடுக்கணும், வீட்டுல திட்டுவாங்கனு பல காரணங்கள் சொல்லுவாங்க. இப்போவரைக்கும் நான் என்ன கெட்டப் சொன்னாலும், எப்போ லேடி கெட்டப்போட சொன்னாலும் பாலாஜி பண்ணுவார். அதுதான் அவரோட ஸ்பெஷல். லேடி கெட்டப் போடுறதுக்கு சகிப்புத்தன்மை இருக்கணும். பாலாஜிகிட்ட அது நிறையவே இருக்கு. ‘அது இது எது’க்கு கெஸ்ட்டா வர பல பேர், வந்ததும் இன்னைக்கு வடிவேல் பாலாஜி வராறானுதான் முதலில் கேட்பாங்க. அதுதான் பாலாஜியோட வெற்றி. காமெடி பண்ற பல பேரோட ரியல் லைஃப் ரொம்ப சோகமா இருக்கும்னு சொல்றதுக்கு மிகச் சிறந்த உதாரணம் வடிவேல் பாலாஜியோட வாழ்க்கைதான். கலக்கப்போவது யாரு சீசன் 4, அது இது எது ஆரம்பத்தில் பாலாஜி, பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தார். அதுக்கப்பறம் அதை விட்டுட்டு முழு நேர வேலையா இதை பண்ணிட்டு இருக்கார். எனக்கு அது லேட்டாத்தான் தெரியும். அப்போதான் நான் யோசிச்சேன், எப்படி அங்க பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டு இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருந்தார்னு. அதை நினைக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. vadivel balaji actorவடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்குக் காரணம் வடிவேல் மாதிரி தத்ரூபமா பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல நம்மகிட்ட பேசுறவங்களை செமையா கலாய்ச்சு விட்டுருவார். அப்படித்தான் பாலாஜி அதிகமா மக்களை ரசிக்க வச்சார். யார் என்ன சொன்னாலும் டக்குனு கலாய்ச்சி விட்டிருவார். அதுக்காகவே பலபேர் உஷாரா இருப்பாங்க. சிரிச்சா போச்சுல அடிக்கடி பாலாஜிக்கு ஒரு சோதனை நடக்கும். அவரோட நேரத்துக்குன்னே வருகிற கெஸ்ட் எல்லாரும் வயசானவங்களா இருப்பாங்க. அந்த நேரத்துல அவங்ககிட்ட,‘வயசான காலத்துல வீட்டுல உக்காந்து டி.வி பாத்தோமா, பேர புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தோமானு இருக்கணும். அதைவிட்டுட்டு உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அதுவும் நான் வர எபிசோடுக்கு உங்களை யார் வரச்சொன்னா?’னு கேட்பார். அப்பறம் ஒரு தடவை மூணு கெஸ்ட்ல இரண்டு பேரை சிரிக்க வச்சுட்டார். அதுல ஒரு பொண்ணு மட்டும் சிரிக்கலை. அவரும் எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார், ஒண்ணும் நடக்கலை. அப்போதான் ஆங்கர் பாலாஜிகிட்ட, ‘அவங்களுக்கு தமிழ் தெரியாது’னு சொல்லுவார். அப்போ ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாலாஜி, அல்டிமெட்டா இருக்கும். பாலாஜிக்கு சில பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ‘சின்ன, சின்ன ரோல்கள் பண்ணி பாலாஜி மேல இருக்கிற எதிர்பார்ப்பு வீணாகிடக்கூடாதுனு நல்ல வாய்ப்பு வரும்போது பண்ணு’னு சொன்னேன். அதுக்காகக் காத்திருக்கிறார் பாலாஜி.
தலைப்புகள்
#vadivel balaji#வடிவேல் பாலாஜி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement