Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.01.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

துணிவா ? வாரிசா ? பொங்கல் வின்னர் அஜித்தா? விஜய்யா? சார்பில்லாத சரியான விமர்சனம் இதோ

M
எழுதியவர்Manikandan11 ஜனவரி, 2023 அன்று 04:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வந்ததற்கு காரணம் "துணிவு" மற்றும் "வாரிசு" படங்கள். இந்த நிலையில் "வாரிசு" மற்றும் "துணிவு" இன்று திரையரங்குகளில் வெளியாகியது. இதனால் எல்லோரும் எதிர்பார்த்த படியே திரையரங்குகள் களைகாட்டியது. பல கொண்டாட்டங்களும் பல அசம்பாவிதங்களும் ஏற்றப்பட்டு வரும் நிலையில், இந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடும் துணிவு மற்றும் வாரிசு படத்தில் எது இந்த பொங்கலை கொண்டாட போகிறது? என்பதை இந்த சார்பில்லாத விமர்சனத்தில் காணலாம் வாருங்கள்.

varisuthunivu

வாரிசு கதைக்களம் :

வாரிசு படத்தை பொறுத்தவரை தொழிலதிபரான சரத்குமாருக்கு ஸ்ரீகாந்த், ஷான், விஜய் என மூன்று மகன்கள். இதில் மூத்த மகன்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் குடும்ப தொழிலை பார்த்துக்கொள்கின்றனர். ஆனால் இளையவரான விஜய் சரத்குமாரின் விருப்பத்திற்கு மாறாக செயல்வடுவதினால் மனக்கசப்பால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதற்க்கு பின்னர் விஜய் 7 வருடங்கள் தன்னை சமூகத்தில் அடையாள படுத்திக்கொள்ள முயற்சி செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது குடும்பத்தில் குழப்பம், தொழிலில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு பின்னர் மீண்டும் வீட்டிற்கு வரும் விஜய் இந்த பிரச்னைகளை சரி சரிசெய்து சரத்குமாரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார் என்பதுதான் கதை.

துணிவு கதைக்களம் :

அஜித் நடித்துள்ள துணிவு படத்தை பொறுத்தவரை, வாங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு வங்கிகளில் பெர்சனல் லோன், கிரெடிட் கார்டு, மியூச்சுவல் பண்ட்ஸ் போன்ற பெயரில் மக்கள் எப்படியெல்லாம் வங்கிகளால் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும், தனியார் வங்கிகளில் உள்ள கட்டண கொள்ளை குறித்ததும் இந்த படத்தில் தெளிவாக கூறியிருக்கின்றார் இயக்குனர் வினோத். இந்தியாவில் உள்ள Your Bank வங்கியை கொள்ளையடிக்கும் அஜித் அதனை ஏன் செய்கிறார்? எதற்காக செய்கிறார்? என்பதை கதையின் வழியாக கூறியிருக்கிறார் இயக்குனர் வினோத்.

துணிவா ? வாரிசா ? பொங்கல் வின்னர் அஜித்தா? விஜய்யா? சார்பில்லாத சரியான விமர்சனம் இதோ

வாரிசு விமர்சனம் :

வாரிசு படத்தை பொறுத்தவரை பல காலமாக ஆக்சன், விவசாயம், அரசியல் போன்ற சமூக பிரச்னைகளை மையமாக கொண்ட படத்தில் நடித்து வந்த விஜய் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய குடும்ப கதைக்கே திரும்பியுள்ளார். இதனால் ரசிகர்கள் மகிழ்சசியடைந்துள்ளார். அதோடு விஜய் தொடக்க காலத்தில் அப்பா செண்டிமெண்ட், தங்கச்சி சென்டிமென்ட இருக்கும் படங்களில் நடித்துதான் பிரபலமானார் என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் மீண்டும் குடும்ப சென்டிமென்டில் உருவாகியுள்ளது இப்படம். படத்தின் பல காட்சிகளில் விஜய் ரசிகர்களின் கைத்தட்டல்களை பெறுகிறார். அதோடு குடும்ப சென்டிமென்ட காட்சிகளில் எதிர்பார்த்த அளவிற்கு நடித்திருக்கிறார் விஜய்.

குறைகள் என்று பார்த்தால் படத்தில் காட்சி நேரத்தை சொல்லலாம், அதோடு படத்தில் அதிக கதாபாத்திரங்கள் இருந்தும் அவர்களின் அறிமுகம் சரியாக இல்லை. வாரிசு படத்தின் "ரஞ்சிதமே" பாடல் வெளியான போது நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அப்பாடலை படத்தில் சரியான இடத்தில் வைக்காதது குறையாக இருக்கிறது. மேலும் படத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதை தெளிவாக காண முடிகிறது. இப்படி சில குறைகள் இருந்தாலும் படம் பொங்கலுக்கு ஏற்ற குடும்ப சென்டிமெண்ட்டாக உருவாக்கி இருக்கிறது.

துணிவா ? வாரிசா ? பொங்கல் வின்னர் அஜித்தா? விஜய்யா? சார்பில்லாத சரியான விமர்சனம் இதோ

துணிவு விமர்சனம் :

அஜித் நடித்திருக்கும் துணிவு படத்தை பொறுத்தவரையில் சுவாரசியமான காட்சிகளுடன் படம் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்கிறது. அஜித் தன்னுடைய தனித்தன்மையான உடல் மொழியால் ரசிகர்களை ஈர்க்கிறார். மேலும் அவரின் வசனங்கள் மிகவும் அற்புதமாகவும், சில சர்ச்சையான விஷியங்களை போற போக்கில் காமெடியாக சொல்லி இருக்கிறார். மேலும் இப்படத்தில் இதுவரை யாரும் பார்த்திடாத அஜித் குமாரை ரசிகர்களின் முன்னல் நிற்க வைத்திருக்கிறார் இயக்குனர் வினோத்.

படத்தில் குறைகள் என்று பாரத்தால் அதிக லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. கிளைமாக்ஸ் முடிக்க வேண்டும் என்று முடித்தார் போல இருந்தது அதனை இன்னும் கூட நன்றாக கொண்டு வந்திருக்கலாம், அதோடு அதன் நீளமும் அதிகமாக இருக்கும் படியாகத்தான் தோன்றியது. படத்தில் சில காட்சிகளில் தொய்வு இருந்தாலும் அதனை ட்விஸ்ட் காட்சிகளின் மூலம் சரிப்படுத்தி இருக்கிறார் வினோத். பின்னணி இசை ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.

எந்த படத்திற்கு வெற்றி :

இப்படி இரண்டு படங்களை வைத்து பார்க்கையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களுடைய பாணியில் சரியாக நடித்திருக்கிறனர். படமும் அப்படிதான் அமைத்துள்ளது. இந்த பொங்கலுக்கு இரண்டு படங்களுமே வெற்றி படங்கள்தான். அதோடு நல்ல வசூலை எதிர்பார்க்கலாம். ஆனால் திரைப்பட விமர்சன ரீதியாக பார்த்தல் வாரிசு படம் ரசிகர்கள் எதிர்பார்த்த கதையாகத்தான் அமைந்துள்ளது. அந்த வகையில் சமூக கருத்து மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தில் விஜய்யின் "வாரிசு" படத்தை முந்தி இருக்கிறது அஜித்தின் துணிவு.

தலைப்புகள்
#அஜித்#விஜய்#thunivu review#Ajith#வாரிசு விமர்சனம்#Varisu Review#Vijay#துணிவு விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement