Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழ் கடவுள் முருகன் சீரியல் நிண்றதுக்கு இதுதான் காரணமா.? வெளிப்படையாக உண்மையை சொன்ன பார்வதி.!

A
எழுதியவர்Ajju10 ஜூலை, 2018 அன்று 05:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் நிறுத்தப்பட்டது குறித்து, அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் குறித்தும் பேசியிருக்கிறார். `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலில் பார்வதியாக நடித்த பிரியா.கடந்த வருடம் அக்டோபர் மாதம் 2- ம் தேதி `விஜய் டி.வி'யில் ஒளிபரப்பப்பட்ட `தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\ tamil kadavul murugan பலதரப்பட்ட புரமோஷன்களுடன் வெளியான இந்த சீரியல் தடாலென ஐந்தே மாதத்தில் முடிவடைந்தது. ஏன் இவ்வளவு அவசரமாக சீரியலை முடிக்க வேண்டும்? - வெளிப்படையாகப் பேசுகிறார், அந்த சீரியலில் பார்வதியாக நடித்த பிரியா. தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் ஃபெயிலியர் ஆனதுக்குக் காரணமாக நீங்கள் நினைப்பது?" ``நான் இப்போதெல்லாம் உண்மையைப் பேசுறதுக்குப் பயப்படுறதில்ல. தயங்குறதும் இல்ல. வெளிப்படையாகவே சொல்றேன். அந்த சீரியல் நல்லாப் போகாததுக்குப் பல காரணங்கள் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை அந்தக் கதைக்கான மைத்தாலஜியை (Mythology) மாற்றாமல் எடுத்திருக்கலாமோனு தோணுச்சு. தப்புத் தப்பா எடுத்ததாலதான் சொதப்பிடிச்சுனு நினைக்கிறேன். முக்கியமா, என் கதாபாத்திரத்துக்கான வடிவமைப்பில் சின்னச் சின்ன சறுக்கல்கள். முருகன் குழந்தையாக இருக்கும்போது, பார்வதியை மகிஷாசூரன் வர்ணிக்கிறான். இதுவே தவறானது என்கிறேன். திருமணத்துக்கு முன்புதான் பார்வதியை மகிஷாசூரன் வர்ணிப்பதாகத்தான் கதை... நான் கேள்விப்பட்டவரை, படித்தவரை!. ஆனால், இதில் வேறுமாதிரி காட்டியிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இந்த சீரியல் நல்ல முயற்சிதான். இன்னும் கொஞ்சம் சொதப்பாமல் எடுத்திருக்கலாம். Priya தமிழ்க் கடவுள் முருகன்' சீரியல் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்ததே?" ``ஆமாம். பெரிய பொருள்செலவில் எடுக்கப்பட்டது அந்த சீரியல். என்னைப் பார்வதியாக நடிக்க அழைத்திருந்தார்கள். எனக்கும் அந்த கேரக்டர் பிடித்திருந்ததால், உடனே ஓகே சொன்னேன். அதற்கான ரிகர்சல், ஃபோட்டோஷூட் என ஒவ்வொரு நாளும் பிஸியாகவே இருந்தேன். சீரியல் ஆரம்பிக்கப்பட்ட சிலநாள்களில் இன்னும் கொஞ்சம் மெலிந்தால் அந்த கேரக்டருக்குச் சரியாக இருக்கும் என நினைத்ததால், நானே முன்னெடுத்து என் எடையைக் குறைத்தேன். அந்த சீரியலில் உங்களுடைய உழைப்பு பற்றி?" ``அதைப் பத்தி சொல்லியே ஆகணும். பதினாறு மணி நேரம்கூட தொடர்ந்து வேலை பார்த்திருக்கேன். பழங்கள் மட்டுமெ சாப்பிட்டு உடம்பு வெயிட் போடாம பார்த்துக்கிட்டேன். அப்படியெல்லாம் கஷ்டப்பட்டு நடித்த சீரியல் ஹிட் ஆகலனா எனக்கு மட்டுமல்ல, அதில் நடித்த எல்லோருக்குமே கஷ்டமாதானே இருக்கும். aniruth நடிப்பு தவிர வேறு ஒரு விஷயத்தில் நீங்கள் கவனம் செலுத்துறீங்களாமே?" ``அட ஆமாங்க. இது எப்படித் தெரிஞ்சது?. இன்னும் ஒரு மூன்று மாதத்தில் டயட்டீஷியனாக என்னைப் பார்க்கலாம். இப்போதும் டயட்டீஷியனாகத்தான் இருக்கேன். ஆனால், தொழில் ரீதியாக இன்னும் ஆரம்பிக்கலை. இனி அதைத்தான் செய்யப்போறேன். என்னைப் பொறுத்தவரை எல்லோருமே ஹெல்த்தியா இருக்கணும். அப்படி இருந்தாலே நாம செய்ய நினைப்பதை எந்தத் தடையும் இல்லாமல் செய்யமுடியும். சுவர் இருந்தால்தானே சித்திரம் வரைய முடியும். எனக்கு நடிப்பைத் தவிர வேற எதுவும் தெரியாதுனு சொல்ற நிலைக்கு வர்றதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனாலதான் அப்பப்போ இந்தமாதிரி டயட் விஷயத்திலும் என்னை ஈடுபடுத்திக்கிட்டே இருக்கேன்."
தலைப்புகள்
#தமிழ் கடவுள் முருகன்#priya#Tamizh kadavul murugan#ப்ரியா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement