Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Palawe
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.01.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராகுல் பேசிய வீடியோ ஏதோ செய்தது - பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஆவேசத்தில் விஜய் சொன்னது

எழுதியவர்subhashini20 ஜனவரி, 2025 அன்று 03:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக மக்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்துகொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பேசி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க இருப்பதாக மத்திய, மாநிலகள் அரசு அறிவித்து இருந்தது.

ராகுல் பேசிய வீடியோ ஏதோ செய்தது - பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஆவேசத்தில் விஜய் சொன்னது

இந்த விமான நிலையம் அமைக்க பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் இருந்து சுமார் 5,000 ஏக்கர் விளைநிலங்கள் தேவைப்படுகிறது. குறிப்பாக, பரந்தூர், ஏகனாபுரம் ,அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம் உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும், நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த மத்திய, மாநில அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பரந்தூர் மக்கள் போராட்டம்:

இதனால் பரந்தூர் உட்பட 12 கிராம மக்களுமே புது சர்வதேச விமான நிலையம் வேண்டாம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதனை எதிர்த்து 910 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடிவரும் மக்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், ராகுல் என்ற சிறுவனுடைய வீடியோவை பார்த்தேன். அது என்னை ஏதோ செய்தது.

https://www.youtube.com/live/Vmk6EZBhAus?si=jNNQ7sygBzZP5P3U

விஜய் பேச்சு:

அதற்காகத்தான் இங்கு வந்தேன். உங்களோடு நான் நிற்பேன். விவசாயிகளுடைய காலடி மண்ணை தொட்டு தான் என்னுடைய அரசியல் பயணத்தை தொடங்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படித்தான் என்னுடைய கள அரசியல் பயணமும் இங்கிருந்து தொடங்கி இருக்கிறது. உங்களுடைய நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள். மக்கள் நம்பும்படி நாடகமாடுவது தான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே. இந்த விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும். உங்கள் கிராம தேவதைகளான எல்லையம்மன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்.

ராகுல் பேசிய வீடியோ ஏதோ செய்தது - பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஆவேசத்தில் விஜய் சொன்னது

அரசியல் பற்றி சொன்னது:

உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களோடு உறுதியாக நிற்பேன். போராட்ட திடலில் உங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால், அதற்கு தடை விதித்தார்கள். சமீபத்தில் துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். இதெல்லாம் ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. விமான நிலையத்தை தாண்டி அவர்களுக்கு ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இதே நிலைப்பாடு உடன் மக்கள் இருக்க வேண்டும். இந்த நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள் தான்.

ராகுல் பேசிய வீடியோ ஏதோ செய்தது - பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஆவேசத்தில் விஜய் சொன்னது

விவசாயம் பற்றி சொன்னது:

விவசாய நிலங்கள் பாதுகாப்புக் கொள்கை தீர்மானத்தில் பரந்தூர் பகுதியில் 13 நீர் நிலைகளை அழித்து சென்னையை நிரந்தர வெள்ள காடாக மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று நான் மாநாட்டிலேயே வலியுறுத்தி இருந்தேன். விவசாயிகளுக்கு ஆதரவாக சட்ட போராட்டத்தை நடத்தவும் நான் தயங்க மாட்டேன். இந்த பிரச்சனையில் நான் உங்களுடன் தான் உறுதியாக நிற்பேன். நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. இந்த இடத்துக்கு ஏர்போர்ட் வரக்கூடாது என்று தான் சொல்கிறேன் என்று ரொம்ப ஆவேசமாக விஜய் பேசி இருக்கிறார். தற்போது விஜயின் இந்த அனல் பறக்க பேசிய வீடியோ தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தலைப்புகள்
#Paranthur Protesters#பரந்தூர் விமான நிலைய#vijay விஜய்#tvk vijay
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement