Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மறைந்த கலைஞர் எழுதிவைத்துச் சென்றுள்ள 3 உயில்கள் இதுதான்..!

A
எழுதியவர்Ajju9 ஆகஸ்ட், 2018 அன்று 09:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் இன்று காலை கவிஞர் வைரமுத்து அஞ்சலி செலுத்தினார். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதியன்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டிருந்த காவேரி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரின் மரணம் அவரின் குடும்பத்தார் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். vairamuthu அப்போது அங்கு வந்திருந்த கவிஞர் வைரமுத்து கருணாநிதியின் உடலுக்கு அருகில் நின்று கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினார். அவரின் தாங்கமுடியாத துக்கத்தை அழுகையின் மூலம் வெளிப்படுத்தினார். இந்தக் காட்சியைப் பார்த்த அனைவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இதற்கு முன்னதாக கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோபாலபுரம் வீட்டில் இருந்தபோதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும் வைரமுத்து அடிக்கடி வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு இன்று காலையிலேயே தன் மகன்களுடன் வந்த வைரமுத்து, கருணாநிதியின் சமாதியில் மலர் தூவி பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், `` சூரியன் இல்லாமல் ஒரு விடியல் வருமா. அதேபோன்று கருணாநிதி இல்லாத தமிழகத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் தந்தைக்குச் செய்யவேண்டிய இறுதி மரியாதையை செய்யவே நான் இங்கு வந்தேன். தமிழக மக்கள் நன்றியுள்ளவர்கள் என நான் நம்புகிறேன். Trebute கருணாநிதியின் லட்சியங்கள், கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது நம் கடமை. அவர் இலக்கியங்கள், சொற்பொழிவு, செயல் ஆகியவற்றில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். அவரின் போர் குணத்தை இந்த கால இளைஞர் கற்றுக்கொள்ள வேண்டும். கருணாநிதியை எதிரி என நினைத்தவர்கள்கூட அவரின் போர்குணத்தைக் கண்டு வியந்துள்ளனர். கருணாநிதி நம் சமூகத்துக்கு எழுதி வைத்துச் சென்றுள்ள மிகப்பெரிய உயில் சுயமரியாதை, தமிழ், இன அடையாளம் ஆகியவை. இவற்றைக் கட்டிக்காப்பாற்ற வேண்டியது தமிழர்களின் பெரும் கடமை” எனக் கூறினார். மேலும், இன்று அதிகாலை முதல் கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்குப் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.
தலைப்புகள்
#வைரமுத்து#vairamuthu#கலைஞர்#Kalaingar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement