Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Amaran
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

அது பேசப்படாமலே இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே - அமரன் படம் குறித்து வசந்த பாலன்

எழுதியவர்Rajkumar9 நவம்பர், 2024 அன்று 02:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' படம் குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதள வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், 'ராணுவம் மற்றும் யுத்தம் சம்பந்தமான திரைப்படங்களைக் காண்பது எனக்கு பெரும் அயர்ச்சியையும் மனசோர்வையும் தரும். கொத்து கொத்தான மரணங்களையும், வெடிகுண்டு வெடித்து மனித உடல் துண்டாவதையும் படம் முழுக்க காண்பது வாழ்க்கை குறித்த பயத்தை அதிகரிக்கும். ஆகவே அதை காண்பதை தவிர்ப்பேன்.

அது பேசப்படாமலே இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே - அமரன் படம் குறித்து வசந்த பாலன்

விமர்சனரீதியாக மரியாதைக்குரிய திரைப்படமாக மாறினால் மட்டுமே மனதைத் திடப்படுத்திக்கொண்டு பார்க்க முயல்வேன். காஷ்மீர் தீவிரவாதம் குறித்த ராணுவத் திரைப்படங்களில் அங்கு உண்மையாக நிலவும் காஷ்மீர் அரசியலை பேசாமலே அல்லது ஒரு சார்பாக பேசியே திரைப்படங்கள் கடந்து போகிறது என்கிற வருத்தமும் எழும்.அரசியலைப் பேசிய ஒன்றிரண்டு திரைப்படங்கள் இருக்கின்றன. ஆனால் அவை பெரும் கவனம் பெறாமலே போய்விட்டன.

சென்றாண்டு காஷ்மீருக்கு படப்பிடிப்பு சென்ற சில தினங்களில் ஆப்பிளுக்கு சந்தையில் உரிய விலை கிடைக்காமல் ஆப்பிள் பயிரிடும் விவசாயிகள் திண்டாடுவதை அறிந்தேன். இப்படி காஷ்மீர் பற்றிய பல கேள்விகள் மனதில் சுழன்றடித்தவண்ணம் இருக்கின்றன.அதனால் அமரன் திரைப்படத்தின் அறிவிப்பில் இருந்தே அந்த திரைப்படத்தைக் காணவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு எனக்கு உருவாகாமலே இருந்தது. முன்னோட்டம் சிறப்பாக இருந்தது.

அது பேசப்படாமலே இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே - அமரன் படம் குறித்து வசந்த பாலன்

இருப்பினும் என் முதல் சாய்ஸ் அமரன் இல்லை என்கிற முடிவோடு தீபாவளிக்கு ஊருக்கு சென்று விட்டேன். தீபாவளி அன்று காலையில் இருந்தே அமரன் பற்றிய நல்லவிதமான விமர்சனங்கள் என்னைச் சுற்றி பட்டாசாக வெடித்தவண்ணம் இருந்தது, பார்க்கலாமே என்று முயற்சித்தால் ஞாயிறு வரை முன்பதிவிலே அத்தனை காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுவிட்டன.சென்னை வந்து அமரன் படத்தைப் பார்த்தேன். காஷ்மீரின் அரசியலும் சூழலும் பேசப்படாமலே தான் இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே. நிஜ ராணுவ வீரர் முகுந்தின் வாழ்க்கை வரலாறு என்பதாலா?

சரி படத்திற்கு வருவோம். சாய் பல்லவி என்ற நடிப்பு ராட்சசி “முகுந்தே! முகுந்தே!!” என்று உருகி அழுது பேசும் வார்த்தைகள் மனதிற்குள் திரும்ப திரும்ப எதிரொலி போல கேட்டுக்கொண்டே இருக்கிறது. படம் பார்க்கும் திருமணமானவர்களுக்கு தங்களின் இணையரின் நினைவு வருவதை தவிர்க்கமுடியவில்லை. ரசிகனை தூண்டில் போட்டு திரைக்குள் சாய் பல்லவி தன் நடிப்பால் தன் ஆளுமையால் தன் பேரழகால் இழுத்து விட்டாள் என்பது தான் உண்மை. 'எங்கட நாட்டுல சேட்டான்னு அண்ணனை மட்டுமில்ல புருஷனையும் அப்டி தானே விளிப்போம் சேட்டா' என்று காதலோடு துள்ளலோடு ஒரு அழகுமானாக ஓடிச் செல்லும் போது நானும் அவள் பின்னால் படத்திற்குள் நுழைந்துவிட்டேன்.

அது பேசப்படாமலே இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே - அமரன் படம் குறித்து வசந்த பாலன்

பிரிவின் துயரை சாய் பல்லவி ஒவ்வொரு பிரேமிலும் மிக மிக நுணுக்கமாக அழுத்தமாக சப்தமாக பதிவு செய்துள்ளார். தலைவனைப் பிரிந்த தலைவியின் துயரை சங்க இலக்கியம் பாடித் தீர்க்கும். அது போன்ற துயரை சாய்பல்லவி உணர்ந்து ஆன்மாவை வெளிக் கொணர்ந்துள்ளதை அழகாக படம் முழுக்க காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.ஒரு விமானத்திலிருந்து இன்னொரு விமானம் மாறுகிற சில மணி நேரங்களில் மட்டுமே ராணுவ வீரனுக்கு தன் குடும்பத்தைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்.

அப்படியொரு காட்சியில் மனைவியின் தோளில் சாய்ந்து சிவா தூங்கும் காட்சி ரசிகர்களின் மனங்களை உலுக்குகிற காட்சி அற்புதம்.மனைவியிடம் போன் பேசிக் கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளின் தாக்குதல் நடக்கத் துவங்கும் அந்த பக்கம் தொடர்பில் சாய் பல்லவிக்கு துப்பாக்கி தோட்டாக்களின் சப்தமும் மரண ஓலமும் கேட்டவண்ணம் இருக்கும். அந்த காட்சியில் யுத்தத்தின் பதட்டத்தை சாய் பல்லவி முகுந்தே முகுந்தே என்று கத்தி கூச்சலிட்டு அழுது புலம்பி நடந்து ஆஹா ஆஹா அற்புதமான குறும்படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அது பேசப்படாமலே இந்த படமும் கடந்து விட்டது வருத்தமே - அமரன் படம் குறித்து வசந்த பாலன்

அது ஒரு குறும்படம் என்று என் உதவியாளர்கள் சொன்னார்கள். ஆகச் சிறந்த காட்சி. எதிர்பாராமல் முன் அறிவிப்பு இல்லாமல் சிவா வீட்டுக்கு வரும் காட்சியில் சாய் பல்லவி காதலையும் அன்பையும் ஏக்கத்தையும் உடலெங்கும் சுமந்து கொண்டு ஓடி தவ்வி அவனைக் கட்டியணைக்கிற காட்சி உண்மையில் அவளின் காதலின் தீவிரம், பிரிவின் ஆழம், ஏக்கம் அத்தனையையும் வெளிப்படுத்திவிட்டது. குறுந்தொகையின் பல பாடல்களில் காண்கிற வரிகள் நினைவுக்கு வந்தன.அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற வரியை ராணுவ வீரர்கள் கோரஸாக பாடும் போது திரையரங்கு கை தட்டி மகிழ்ந்தது.

சிவா முதன்முதலாக சிவா என்று தெரியாமல் முகுந்தாக தெரிந்தது அவர் நடிப்பின் இன்னொரு பரிமாணம். அவர் உடலைக் கூட்டி குறைத்து பனி பிரதேசத்தில் ஓடி சண்டையிட்டு நிஜ முகுந்தை மற்றும் நிஜ ராணுவ வீரனை கண்முன் நிறுத்தியுள்ளார்.ஜீவி தன் பின்னணி இசையால் ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தை ரசிக மனங்களுக்குள் நுழைய செய்து திரையிலிருந்து அவர்களின் கவனம் சிதறாதவாறு அற்புதமான இசையமைத்துள்ளார். இயக்குநர் உட்பட்ட மொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகள் என்று அவரது பதிவில் தெரிவித்துள்ளார்.

தலைப்புகள்
#Amaran#அமரன்#VASANTHA BALAN#வசந்த பாலன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement