Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.09.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சொந்த ஊரில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஏன் மேடையேற்றவில்லை ? - 'கஞ்சாப்பூ கண்ணால' பாடலாசிரியர் மணிமாறன்.

எழுதியவர்Rajkumar3 செப்டம்பர், 2022 அன்று 08:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் படத்தில் இடம்பெற்ற 'கஞ்சா பூ கண்ணால' பாடல் மாபெரும் ஹிட் அடித்தது. ஆனால், அந்த பாடலை எழுதிய பாடலாசிரியரை படக்குழு புறக்கணித்ததாக சர்ச்சை எழுந்து இருந்தது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது.

சொந்த ஊரில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஏன் மேடையேற்றவில்லை ? - 'கஞ்சாப்பூ கண்ணால' பாடலாசிரியர் மணிமாறன்.

இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணாலே பாடலை நீக்க வேண்டும் என்ற சர்ச்சை சோஷியல் மீடியாவில்
வைரலாகி வருகிறது.

கஞ்சா பூ கண்ணாலே பாடல்:

இந்த படத்தில் இடம்பெற்ற கஞ்சா பூ கண்ணாலே பாடல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி இருந்தது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. மேலும், இந்த பாடல் வெளியானதை அடுத்து பலரும் இந்தப் பாடலைப் போல் நடனமாடி ரில்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்கள். தற்போது இந்த பாடலை நீக்க வேண்டும் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற அமைப்பு வலியுறுத்தி இருக்கிறது. இந்த அமைப்பை நடத்தி வருபவர் ராஜேஸ்வரி பிரியா. இவர் சமூகத்தில் நடக்கும் அநீதிகள் குறித்து சோசியல் மீடியாவில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

சொந்த ஊரில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஏன் மேடையேற்றவில்லை ? - 'கஞ்சாப்பூ கண்ணால' பாடலாசிரியர் மணிமாறன்.

ராஜேஸ்வரி பிரியா வெளியிட்ட அறிக்கை:

இந்த நிலையில் இவர் விருமன் படத்திலிருந்து கஞ்சா பூ கண்ணாலே பாடலை நீக்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, பெண்ணின் கண்களை அழகு என்று வர்ணிக்க ஆயிரக்கணக்கான தமிழ் வார்த்தைகள் இருக்கும் போது கஞ்சாப் பூ கண்ணாலே என்று தான் பாடல் எழுத வேண்டுமா???? கஞ்சா போன்ற போதை பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க பல வழிமுறைகள் தேவைப்படுகிறது. அதில் முக்கியமானது போதைப்பொருளை பற்றி நினைவூட்டாமல் இருப்பது ஆகும்‌.

சொந்த ஊரில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ஏன் மேடையேற்றவில்லை ? - 'கஞ்சாப்பூ கண்ணால' பாடலாசிரியர் மணிமாறன்.

கஞ்சா பூ கண்ணாலே குறித்த சர்ச்சை:

கஞ்சாப் பூ என‌ப் பாடல் கேட்டால் திருந்த நினைப்பவன் கூட உடனே கஞ்சாவை தேடி செல்வான். ஏற்கனவே “கஞ்சா வெச்ச கண்” எனப் பாடல் வெளியாகி உள்ளது. அதனை எதிர்த்திருந்தால் திரும்ப இப்படி ஒரு பாடல் வந்திருக்காது .இதனையும் எதிர்க்காவிட்டால் பிற்காலத்தில் கொகைன், அபின் என்று இன்னும் பல போதைப்பொருள் பெயரில் பாடல் வெளியாகத் தொடங்கும். எதை ஒழிக்க வேண்டுமோ அதன்‌ பெயரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உச்சரிக்க வைப்பது உகந்தது அல்ல.

https://www.youtube.com/watch?v=z1ftLxjmCW8

மன்னிப்பு கேட்ட பாடலாசிரியர் :

திரைப்படத் துறையினர் மக்கள் நலன்‌ குறித்து சிந்தித்து ஒவ்வொன்றையும் செய்ய வேண்டும்‌ அல்லது தணிக்கை குழுவாவது இது போன்ற‌ வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என அறிவிக்க வேண்டும். நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் நான் சொல்ல வரும் கருத்தினை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கலைத்துறையை நேசிப்பவள் நான். ஆனால், சமூகம் போதைக்கு அடிமையாக மாறி வரும் நிலையில் இதனை தவிர்க்கலாம் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில்இந்த பாடல் தவறான புரிதல் ஏற்படுத்தியிருந்தால் பகிரங்க மன்னிப்பு கேட்பதாக விருமன் பட பாடலாசிரியர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

புறக்கணிக்கப்பட்டாரா மணிமாறன் :

இந்த பாடம் மாபெரும் ஹிட் அடித்து இருந்தாலும் இந்த பாடலை எழுதிய பாடல் ஆசிரியரை அவரது சொந்த ஊரான மதுரையில் நடைபெற்ற நடைபெற்ற விருமன் பட இசை வெளியிட்டு விழாவில் மேடையேற்றப்படவில்லை. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் 'ஒரு சிறிய பிரச்சினையால்தான் என்னை அந்த விழாவில் அவர்கள் அழைக்கவில்லை. அவர்களுக்குள் நிறைய பிரச்சனைகள் இருந்தது நான் முதல் பாடலாசிரியர் என்பதால் மறந்து இருக்கலாம். ஆனால், திட்டமிட்டு என்னை மேலே ஏற்ற வில்லை என்று பலர் சொன்னார்கள் ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

தலைப்புகள்
#Viruman#பாடலாசிரியர் மணிமாறன்#Kanja Poo Kannala#விருமன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement