Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
7 பிரிவுகளில் நாமினேட்டான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - விருது விழாவையே புறக்கணித்த இயக்குனர். அவரே போட்ட பதிவு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

7 பிரிவுகளில் நாமினேட்டான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - விருது விழாவையே புறக்கணித்த இயக்குனர். அவரே போட்ட பதிவு.

A
எழுதியவர்Arun28 ஏப்ரல், 2023 அன்று 02:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஏழு பிரிவுகளில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது பரிந்துரைக்கப்பட்டதற்கு இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி புறக்கணித்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 68வது பிலிம்பேர் விருதுகள் மும்பையில் உள்ள ஜியோ சர்வதேச மையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்க இருக்கிறார். அவருடன் இணைந்து ஆயுஷ்மான் குரானா மற்றும் மனீஷ் பால் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

7 பிரிவுகளில் நாமினேட்டான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - விருது விழாவையே புறக்கணித்த இயக்குனர். அவரே போட்ட பதிவு.

இதில் ஆலியா பட்டின் 'கங்குபாய் கத்தியவாடி', விவேக் அக்னிஹோத்ரியின் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', ரன்பீர் கபூரின் 'பிரம்மாஸ்திரா' உட்படப் பல பிரிவுகளில் விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் உட்பட ஏழு பிரிவுகளில் விருந்து பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இந்த ஃபிலிம்பேர் விருதில் பங்கேற்க மறுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விவேக் அக்னிஹோத்ரி டீவ்ட்:

அதாவது, இந்த விருது வழங்கும் விழாவில் விவேக் அக்னிஹோத்ரி கலந்து கொள்ள மறுத்திருக்கிறார். மேலும் இது குறித்து அவர் டீவ்ட் ஒன்றும் போட்டு இருக்கிறார். அதில், தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 7 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்தேன். ஆனால், இந்த நியாயமற்ற சினிமாவிற்கு எதிரான இந்த விருது விழாவில் பங்கேற்க மறுக்கிறேன். காரணம், முக்கியமான நட்சத்திரங்களைத் தவிர வேறு யாருக்கும் உரிய அங்கீகாரத்தை இந்த விருதுகள் வழங்குவதில்லை.

ANNOUNCEMENT:
FILMFARE AWARDS

I learnt from media that #TheKashmirFiles is nominated in 7 categories for the 68th Filmfare Awards. But I politely refuse to be part of these unethical and anti-cinema awards. Here is why:

According to Filmfare, other than the stars, nobody has… pic.twitter.com/2qKCiZ8Llh

— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) April 27, 2023

விருது விழா குறித்து சொன்னது:

இந்த பிலிம்பேர் விருதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சஞ்சய் லீலா பன்சாலி, சூரஜ் பர்ஜாத்யா போன்ற திறமை வாய்ந்த இயக்குநர்களின் புகைப்படங்கள் எங்கும் இடம்பெறவில்லை. சஞ்சய் லீலா பன்சாலி, ஆலியா பட் போலவும், சூரஜ், மிஸ்டர் பச்சனைப் போலவும், அன்னேஸ் பாஸ்மி, கார்த்திக் ஆர்யனைப் போலவும் தோற்றமளிக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அதனால்தான் இந்த ஊழல் நிறைந்த நியாயமற்ற விருதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த விருதுகளை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன்.

விருதை மறுக்க காரணம்:

ஒரு திரைப்படத்தின் திறமை வாய்ந்த எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் படக்குழு உறுப்பினர்களை அடிமைகளாக நடத்தும் விருதுகளின் ஒரு பகுதியாக இருக்க நான் மறுக்கிறேன். இந்த விருதில் வெற்றி பெறுபவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். வெற்றி பெறாதவர்களுக்கு அதைவிட என்னுடைய சிறந்த வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார். தற்போது இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரியின் டீவ்ட் பாலிவுட் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

7 பிரிவுகளில் நாமினேட்டான 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' - விருது விழாவையே புறக்கணித்த இயக்குனர். அவரே போட்ட பதிவு.

இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் 11 மார்ச் 2022 ஆம் ஆண்டு வெளியான இந்தி மொழி திரைப்படம் தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இந்த படத்தை ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்தது. இந்தத் திரைப்படம் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி இந்துக்கள் காஷ்மீரத்தை விட்டு வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி, சின்மயி மண்டலேகர், பிரகாஷ் பெலவாடி மற்றும் புனித் இஸ்ஸார் ஆகியோர் நடித்து இருக்கின்றனர். மேலும், இந்த படம் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து அதிக வசூல் சாதனைகளை செய்தது.

தலைப்புகள்
#தி காஸ்மீர் ஃபைல்ஸ்#The Kashmir files#விவேக் அக்னிகோத்தரி.#vivek Aghnihorthi
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement