சுயநலவாதி, முட்டாள். அனுரங் கஷ்யப்பை கழுவி ஊற்றிய நட்டி- இது என்ன புது பஞ்சாயத்தா இருக்கு.

0
2505
- Advertisement -

பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருப்பவர் இயக்குனர் அனுராக் காஷ்யப். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனுராக் காஷ்யப். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர்.

-விளம்பரம்-

இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் கூட இவர் இயக்க உள்ள வெப் சீரிஸ் குறித்து பல தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் அனுரங் கஷ்யப்பை கடுமையாக விமர்சித்து தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பல கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பின்னர் கதாநாயகனாக அவதாரமெடுத்தவர் நட்டி நாகராஜ். மிளகாய் படத்தின் மூலம் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் சதுரங்க வேட்டை, எங்கிட்ட மோததே, போங்கு உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து தமிழ் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். சமீபத்தில் இவர் அனுரங் குறித்து கூறியுள்ளதாவது,

‘சத்யா’ படத்தின் கதாசிரியர்களில் அனுராக் காஷ்யப்பும் ஒருவர். அதன் பிறகு எங்களோடு சேர்ந்து ‘பான்ச்’ படத்தை உருவாக்கினார். அதற்காக நான்எந்த பணத்தையும் பெற்றுக்கொள்ளாமல் அவரை ஆதரித்தேன். ‘லாஸ்ட் ட்ரெய்ன் டு மஹாகாளி’ படத்துக்காகவும் நான் சம்பளம் பெறாமல் வேலை செய்தேன். எல்லாமே அவருக்காகத்தான் செய்தேன். அவர் தனது அத்தனை நண்பர்களையும் தன் வட்டத்திலிருந்து தள்ளியே வைத்திருந்தார்.

-விளம்பரம்-

அனுராக் என்னை மறந்துவிட்டு அர்த்தமில்லாமல் பேசுகிறார். அவரோடு பணியாற்றியவர்களைக் கேளுங்கள். அவர் ஒரு முட்டாளன்றி வேறு ஒன்றுமில்லை. முட்டாள்கள் முட்டாள்களாகவே இருப்பார்கள்.நான் ஒரு சுயநலவாதியைப் பற்றிப் பேசினேன். அது அனுராக் காஷ்யப் தான். நான் உண்மையைக் கூறுகிறேன். ஆனால் யாரும் கேட்க விரும்பவில்லை. என்ன செய்வது. எனது இதயத்தின் ஆழத்திலிருந்து நான் உண்மையைச் சொல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement