ரஜினி, கமல், விஜய் என்று பல்வேறு படங்களில் பணியாற்றிய பிரபலத்தின் வீட்டில் நேர்ந்த மரணம்.

0
4822
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முக்கியமான ஒளிப்பதிவாளர்களில் ரத்ன வேல் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விக்ரம், ரஜினி என பல நடிகர்களின் படத்தில் பணியாற்றி உள்ளார். இவர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த அரவிந்தன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து திருமலை, நந்தா, வாரணம் ஆயிரம், சேது, எந்திரன் என பல சூப்பர் ஹிட் படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பிற மொழி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for cinematographer rathnavelu

- Advertisement -

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரத்ன வேல் அவர்களின் அம்மா இன்று காலமாகி உள்ளார். அதை ஒளிப்பதிவாளர் ரத்ன வேல் அவர்கள் தனது ட்விட்டர் பதிவிட்டு உள்ளார். ஒளிப்பதிவாளர் ரத்ன வேல் அவர்களின் அம்மா பெயர் ஞானேஸ்வரி. இவருக்கு 80 வயது ஆகி உள்ளது. ட்விட்டரில் ஒளிப்பதிவாளர் ரத்ன வேல் கூறியது,

என்னுடைய கனவு லட்சியத்தை வார்த்தைகளால் அல்லாமல் கண்கள் மூலம் புரிந்து கொண்டவர் என்னுடைய அம்மா. எப்போதும் எனக்காக துணையாக நின்றவர். பல விஷயங்களுக்கு எனக்கு ஆதரவளித்தார். வாழ்க்கையில் நான் இந்த அளவிற்கு சாதித்து வெற்றி அடைந்தற்கெல்லாம் அவர் தான் காரணம்.

-விளம்பரம்-

அவர் இல்லையென்றால் நான் என்று இல்லை. என்னுடைய உற்சாகம், சந்தோஷம், சர்வமும் என் அம்மா தான். ஆனால், இன்று என் அம்மாவை நான் பிரிந்து விட்டேன். என் அம்மாவின் அன்பிற்கு நன்றி என்று பதிவிட்டு உள்ளார். பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் ரத்னவேல் தாயாருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.

సినిమాటోగ్రఫర్ రత్నవేలు తల్లి మృతి..!!

மேலும், பல சினிமா பிரபலங்கள் ரத்தினவேல் அம்மாவின் மறைவிற்கு இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். சோசியல் மீடியாவில் ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இவர் தமிழில் இந்தியன் 2 படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FRathnaveluDop%2Fstatus%2F1241270096477089793&widget=Tweet

சமீபத்தில் இவர் படம் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான கதையும் இவர் எழுதி முடித்து விட்டார். இவர் கடந்த ஏழெட்டு வருடங்களாக படம் இயக்கும் முயற்சியில் இருந்ததாக தெரியவந்துள்ளது. பெரிய படங்களுக்கு அடுத்தடுத்து ஒளிப்பதிவு வந்ததால் படம் தள்ளிப்போனதாக கூறப்படுகின்றது.

Advertisement