நீண்ட வருடங்களுக்கு பிறகு இணையும் ரஜினியின் ‘தளபதி’ கூட்டணி..!வெளியான புதிய அப்டேட்..!

0
486
Rajinithalapathy

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் ரஜினியுடன் கை கோர்த்துள்ளார். ரஜினி – முருகதாஸ் கூட்டணியில் முதல் முறையாக உருவாக உள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின.

rajini-murugadoss

இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கமிட் ஆக இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது. ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் தனது மூன்றவது படத்திலேயே தேசிய விருதை வென்றவர். அதுபோக மலையாளம், தமிழ் என்று பல்வேறு படங்கலில் பணியாற்றி பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், முருகதாஸுடன் ஏற்கனவே துப்பாக்கி, ஸ்பைடர் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். அதே போல மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘தளபதி’ படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

cinematographer santhosh sivan

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு ரஜினியின் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளது எந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இதை பற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.