நாயை வைத்து தயாரிப்பாளர்களை மோசமாக விமர்சித்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்

0
131
Santosh-shivan

தமிழில் “ரோஜா, தளபதி, இருவர், துப்பாக்கி ” போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ட்விட்டரில் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதில், தயாரிப்பாளர்கள், படத்தில் வேலைபார்த்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கும்போது கோபமாக இருப்பதாகவும், அதே நேரத்தில் படத்தில் நடித்த நடிகைகளுக்கு சம்பளம் கொடுக்கும்போது சிரித்த முகத்துடன் இருப்பதாகவும் ஒரு நாயின் புகைப்படம் இருக்கும் மீம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

santosh sivan tweet

ஒளிப்பதிவாளரின் சந்தோஷ் சிவனின் இந்த டீவீட்டிற்கு பல்வேறு தயாரிப்பாளர்களிடம் இருந்தும் பேரும் எதிர்ப்புகள் கிளம்பியது. பிரபல நடிகரும், தயரிப்பாளருமான ஆர் கே சுதீஷ்,சந்தோஷ் சிவனின் பதிவிற்கு மன்னிப்பு கேள், இல்லையென்றால் உன்னை கலைத் தாய் உணரச் செய்யும் என்று கடுமையாக ட்வீட் செய்துள்ளார்.

அதே போல இந்த மீம்ஸ் குறித்து தயாரிப்பாளர் தேனப்பன் கருத்து தெரிவிக்கையில், எனக்கு இப்படியொரு மீம்ஸை பார்த்தவுடன் மிகவும் கோபம் வந்தது. ஏனென்றால், திரையில் பி.சி.ஸ்ரீராம்க்குப் பிறகு, வியந்து ரசிக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அவர் இப்படியொரு மீம்ஸை வெளியிட்டாரா என்று ஆதங்கப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

santosh sivan tweet

சந்தோஷ் சிவனின் இந்த சர்ச்சையான டீவீட்டை கண்டித்துள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், சந்தோஷ் சிவனின் ட்வீட் பதிவு, மிகவும் கண்டனத்திற்குரியது. இது தொடர்பாக அவர் மீது இன்றே நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்த சந்தோஷ் சிவன், அது நான் பதிவிட்ட பதிவு அல்ல ட்விட்டரில் வந்த ஒரு புகைப்படத்தை நான் ஷேர் செய்தேன். ஆனால், அந்த புகைப்படம் இத்தனை தயாரிப்பாளர்களின் மனதை புண்படுத்தியது என்பதை அறிந்து அந்த புகைப்படத்தை நான் நீக்கிவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.