பெண்ணிடம் சில்மிஷம், அடிதடியில் முடிந்த பொன்னியின் செல்வன் சக்சஸ் பார்ட்டி. கோபித்து சென்ற மணி ரத்னம்.

0
448
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் பார்ட்டி அடிதடியில் முடிந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
ponniyinselvan

இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள். ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரை வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் தான் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி இருந்தார்கள். படம் வெளியாகி ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என அனைவரும் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. அதோடு படம் நல்ல வசூல் வேட்டையும் செய்திருக்கிறது. தற்போது வரை இந்த படம் திரையரங்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக கடந்த வாரம் பொன்னியின் செல்வன் பட குழுவினர் சக்சஸ் பார்ட்டி ஒன்று நடத்தி இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சக்சஸ் பார்ட்டி:

இதில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நட்சத்திரங்களும், படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இயக்குனர் மணித்தரத்தினம், நகைச்சுவை நடிகர் வடிவேலு, சூப்பர் ஸ்டார், அபிஷேக் பச்சன் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். இந்த நிலையில் இந்த சக்சஸ் பார்ட்டி அடிதடியில் முடிந்திருந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினிமா பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியிருப்பது, மணிரத்தினத்திடம் பணிபுரிந்த பெண் உதவி இயக்குனர் ஒருவரிடம் லைகா நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் தவறாக நடக்க முயற்சித்து இருக்கிறார்.

அடிதடியில் முடிந்த சக்சஸ் பார்ட்டி:

அப்போது அங்கு இருந்தவர்கள் அந்த நபரை அடித்து உதைத்து அங்கிருந்து வெளியே துரத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவம் வந்த பிரபலங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, லைக்கா நிறுவனத் தலைவர் சுபாஷ்கரன் இந்த செய்தியை அறிந்தவுடன் செம அப்செட் ஆகினார். கடைசியில் சக்சஸ் பார்ட்டி சண்டையில் முடிந்ததால் சிறிது நேரம் சம்பவ இடத்தில் பரபரப்பு நிலவி அனைவரும் என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

Advertisement