நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவனுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர்,' பரியேறும் பெருமாள்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்திருந்தது. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'கர்ணன்', 'மாமன்னன்' போன்ற எல்லா படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்திருக்கும் படம் 'வாழை'. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர், திவ்யா துரைசாமி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாரி செல்வராஜ் நிறைய பேட்டிகளில் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
நீயா நானா நிகழ்ச்சி:
அந்த வகையில், மாரி செல்வராஜ் சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுக் கொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகப் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது 'நீயா நானா' நிகழ்ச்சி தான். நீயா நானா கோபிநாத் என்று சொன்னாலே போதும் சின்ன குழந்தைகள் கூட அடையாளம் சொல்லுவார்கள். அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி தான் 'நீயா நானா'.
யப்பா சாமி 🥵🥵🥵😭😭😭👏🏽👏🏽👏🏽💥💥💥😳😳😳🔥🔥🔥❤️❤️❤️
— P.A.Pragash MA.,LLB 🍁🌿 (@Legal_rowdy) August 25, 2024
King Maker 👑 @mari_selvaraj 🧎🏽 pic.twitter.com/WmCVKenr8V
சமூகப் பிரச்சனைகளை விவாதிக்கும் நிகழ்ச்சி:
இந்த நிகழ்ச்சிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, காதல், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி, விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி கடந்த 23 வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதேபோல், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போர் ஒரு சில நிமிடம் வந்து சென்றாலுமே, மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறார்கள்.
சிறுவனின் ஆதங்கம்:
சமீபத்தில் வாழைப்பழம் வெளியாகி மாரி செல்வராஜ் சிறப்பு விருந்தினராக வந்ததால், படித்துக்கொண்டே வேலைக்குச் செல்லும் மாணவர்கள் Vs மாணவர்களின் பெற்றோர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருந்தார்கள். அதில் முத்து என்ற சிறுவன், நான் நன்றாக படித்து VAO அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால், எனது அப்பா இறந்த பிறகு அரசாங்கத்தில் பணம் கொடுத்தார்கள். அந்தப் பணத்தை பெறுவதற்கு, அதிகாரிகள் கையெழுத்து போட என்னை ஒரு வாரமாக அலைய வைத்தார்கள்.
https://www.youtube.com/watch?v=1AzPFjqmEGM
சிறுவனுக்கு கிடைத்த வாய்ப்பு:
அது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதனால், நான் VAO அதிகாரியாகி, யாரையும் அலைய வைக்காமல் உடனே கையெழுத்துப் போடுவேன் என்றார். இந்த சிறுவன் பேசியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கரமாக வைரல் ஆகி இருந்தது. இந்நிலையில் தற்போது 'Veranda Race' என்னும் பயிற்சி நிலையம், இந்த மாணவனுக்கு தன்னுடைய இலக்கை அடைய இலவசமாக பயிற்சி வழங்க முன் வந்திருக்கிறது. இந்த மாணவனுக்கு உதவியதற்காக அனைவரும் அந்த பயிற்சி மையத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.






