இப்படி தான் ராஜபாட்டை பர்ஸ்ட் லுக்கும் இருந்துச்சி. கிண்டல் செய்தவருக்கு பிகில் பட விஜய் புகைப்படத்தின் மூலம் பதில் அளித்த இயக்குனர்.

0
47733
cobra

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம். சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் தன்னுடைய திறமையால் திரை உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் “கோப்ரா”.

தற்போது நடிகர் விக்ரம் அவர்கள் இந்த கோப்ரா படத்தில் ஒரு மிகப் பெரிய சாதனை செய்து உள்ளார். அதாவது நடிகர் விக்ரம் இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் வருகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. தமிழ் சினிமா உலகில் சிவாஜி கணேசன், கமலஹாசன் ஆகியோரின் சாதனைகளை( கெட்டப்) மிஞ்சும் வகையில் விக்ரம் இந்த படத்தில் நடித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விக்ரம் அவர்கள் 20 விதமான கெட்டப்புகளில் நடித்து உள்ளார் என்று கூறபடுகிறது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ஐயோ பாவம் என்று கமன்ட் செய்த ரசிகருக்கு, நடுவிரலை காட்டிய ரித்விகா. ஷாக்கான ரசிகர்கள்.

இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார். ஹரிஸ் கண்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் எஸ் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வரப்போகிறது என்றும் கூறப்படுகிறது. விக்ரமின் கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் இப்படித் தான் விக்ரம் நடித்த ராஜபாட்டை படம் ஃபர்ஸ்ட் லுக் பல கெட்டப்புகளில் வெளிவந்தது. ஆனால், அந்த படம் தோல்வியுற்றது என கிண்டல் செய்து உள்ளனர். இது விக்ரம் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து அவர்கள் பிகில் படத்தில் விஜய் மிஸ் ஆகாது என்று ஒரு காட்சியில் சொல்லி இருப்பார். அந்த புகைப்படத்தை போட்டு மிஸ் ஆகாது, கண்டிப்பாக வெற்றி அடையும் என்று மறைமுகமாக கூறியுள்ளார். தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து பதிவிட்டுள்ள பிகில் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement