கோப்ரா படத்தின் கிளைமாக்ஸ்ஸை குறை சொன்ன ரசிகர் – இயக்குனர் கொடுத்த பதிலடி. மங்காத்தா படத்தை சொல்றாரா ?

0
201
- Advertisement -

கோப்ரா படத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்களுக்கு இயக்குனர் அஜய் ஞானமுத்து கொடுத்து இருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவர் சினிமாவில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் முன் தன்னுடைய கடும் உழைப்பினால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து இருக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவருடைய நடிப்பிற்கு தேசிய விருது, தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் சிவாஜி, கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக இருப்பவர் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் நான் மகான் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் “கோப்ரா”. இந்த கோப்ரா படத்தில் வித விதமான கெட்டப்புகளில் விக்ரம் வருகிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி நடித்து இருக்கிறார்.

- Advertisement -

கோப்ரா படம்:

இவர்களுடன் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். மிகுந்த பொருட்செலவில் இந்த படம் உருவாகி இருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஸ்கிரீன் படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி செட்டி, இர்பான் பதான், ஆனந்தராஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி உட்பட பல நட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் கதை:

படத்தின் ஆரம்பத்தில் ஸ்காட்லாந்து நாட்டு இளவரசரை கொல்ல ஆப்பிரிக்க பாதிரியார் தோற்றத்தில் கதாநாயகன் விக்ரம் வருகிறார். இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியாக இர்பான் பதான் வருகிறார். அந்த இளவரசர் கொலை மாதிரியே இந்தியாவில் ஒரிசா முதல்வர் ஒருவர் கொல்லப்படுகிறார். மேலும், இரண்டிலுமே ஒற்றுமை இருக்கிறது என்ற கல்லூரி மாணவி மீனாட்சி கோவிந்தராஜன் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். அதற்குப் பிறகு அடுத்தடுத்து நடக்கும் சில கொலை சம்பவங்களை விக்ரம் செய்கிறார்.

-விளம்பரம்-

படத்தை விமர்சித்த நெட்டிசன்:

இதன் பின்ணணி என்ன? சர்வதேச கொலையாளிகளை இர்பான் கண்டுபிடிக்கிறாரா? விக்ரம் அவரிடம் இருந்து தப்பித்தாரா? விக்ரம் இந்த கொலை செய்வதற்கான காரணங்கள் என்ன? என்பது தான் செய்வதற்கான மீதி கதை. பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த கோப்ரா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இதனால் படத்தின் வசூலில் அளவு குறைந்திருக்கிறது. அதோடு படத்தின் நீளம் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்ததார். இதனால் நீளத்தை தற்போது 20 நிமிடங்கள் குறைத்து இருக்கிறார்கள்.

மங்காத்தா படத்தை குறிப்பிட்டாரா ?

இந்த நிலையில் கோப்ரா படத்தைக் குறித்து வரும் விமர்சனங்களுக்கு இயக்குனர் கொடுத்து இருக்கும் பதிலடி வைரலாகி வருகிறது. அதாவது, படத்தின் கிளைமாக்ஸ் தான் மோசமாக இருந்தது என்று ஒருவர் விமர்சித்து இருந்தார். அதை பார்த்த கோப்ரா பட இயக்குனர் அஜய்ஞானமுத்து, கிளைமாக்ஸ்சில் ஹீரோ தப்பித்து வெளிநாட்டில் சுதந்திரமாக நடமாடி கொண்டாடி இருக்கிறார் என மாஸ் பிஜியம் போட்டு எல்லாம் போட்டு காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால், ethically மிகப்பெரிய குற்றங்கள் செய்த அந்த கதாபாத்திரத்தை சுதந்திரமாக விடுவது சரியா? என்று கேட்டிருக்கிறார்.

3.3.3 மணி நேர படத்தின் நீளம் பற்றி விளக்கம் :

இப்படி அஜய் ஞானமுத்து கூறியதன் மூலம் அஜித் நடித்த மங்காத்தா கிளைமாக்ஸ்ஸை தான் தாக்கி பேசியிருக்கிறார் என்று நிட்டிசன்கள் கூறி வருகிறார்கள். அதே போல 3.3.3 மணி நேர படத்தின் நீளம் பற்றி விளக்கமளித்த அஜய் ஞானமுத்து, “‘3’ என்பது என்னுடைய லக்கி நம்பர் அல்ல. ‘3+3+3=9’, ‘333=27′ போன்றவையும் எனது லக்கி நம்பர் இல்லை. படத்தின் காட்சிகள் மற்றும் அதில் உள்ள டீடெயில்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காக அதன் நீளம் குறைக்கப்பட வேண்டாம் என்று நினைத்தோம். அது பார்வைகளுக்கு பிடிக்கும் என்று நினைத்தோம். சில பார்வையாளர்களுக்கு அது பிடித்தும் இருந்தது. பின்னர் பார்வையாளர்களின் வேண்டுகோள்படி அதை சரி செய்தோம். மேலும், நிச்சயமாக என்னுடைய அடுத்தப் படங்களில் இதை கவனத்துடன் கையாள்வேன்” என்று கூறி இருக்கிறார்.

Advertisement