இணையத்தில் வைரலாக பரவி வரும் காக்ரோச் சேலஞ்ச்.! அட கருமமே.!

0
850
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் பல்வேறு சேலஞ்ச்கள் வைரலானதை நாம் கண்டுள்ளோம். கிகி சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச், நோ ஷேவ் சேலஞ்ச் என்று பல்வேறு சேலஞ்ச்கள் சமூக வளைத்தளத்தில் வைரளாகியுள்ளது. அந்த வகையில் தற்போது காக்ரோச் சேலஞ்ச் என்று புதிய சவால் துவங்கியுள்ளது.

-விளம்பரம்-

இந்த ‘காக்ரோச் சேலஞ்’சை முதன்முதலில் தொடங்கியவர் பர்மாவைச் சேர்ந்த அலெக்சன் என்ற இலைஞர் தான். அது என்ன காக்ரோச் சேலஞ்ச் என்று பார்த்தால் கரப்பான்பூச்சியை முகத்தில் ஓடவிட்டு செல்ஃபி புகைப்படம் எடுப்பதுதான், இந்த ‘காக்ரோச் சேலஞ்ச்’. கரப்பான்பூச்சி என்றாலே பலருக்கும் பயம். அந்தப் பூச்சியை பார்த்தாலே, பலருக்கு அருவருப்பும், பயமும் தொற்றிக்கொள்ளும்.

- Advertisement -

கரப்பான் பூச்சியை பார்த்ததும் பல அடி தூரம் ஓடி ஒளிந்து கொள்பவர்கள் உண்டு. அந்தப் பயத்தை, முறியடிக்கவே இந்தச் சவால் எனக் கருதி பலரும் இதை ஏற்றுக்கொண்டு தங்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு  வருகின்றனர்

Advertisement