அமீர் பேசியதில் தப்பே இல்லை..! கோவை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு .!

0
699
Ameer-Director

தமிழகத்தில், சமீபத்திய கைதுகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. ஆனால், இந்தக் கைதுகளை நீதிமன்றங்கள் ஏற்பதில்லை.`தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் இயக்குநர் அமீர் பேசியதில் தவறில்லை’ எனக் கூறி, அவருக்கு கோவை நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

ameer

- Advertisement -

கோவையில், தனியார் தொலைக்காட்சி சார்பில் கடந்த 8-ம் தேதி நடத்தப்பட்ட விவாத நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் கலந்துகொண்டார். அப்போது அவர் சர்ச்சைக்குரிய வகையிலும், மோதல் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் கூறி, அமீர் மீதும், அந்தத் தொலைக்காட்சி மற்றும் அதன் செய்தியாளர் சுரேஷ் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனிடையே, இந்த வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி, இயக்குநர் அமீர் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘இயக்குநர் அமீர் பேசியதில் தவறில்லை’ என்று கூறிய நீதிபதி, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, பீளமேடு போலீஸார் அமீருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர். இதையடுத்து, பீளமேடு காவல் நிலையத்தில் அவர் இன்று ஆஜரானார். அவரிடம், சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

-விளம்பரம்-

 

ameer

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமீர், “கோவை நீதிமன்றத்தில், நீதிபதிகூட அமீர் தவறாக என்ன பேசியிருக்கிறார் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். எனது தரப்பிலிருந்து பா.ஜ.க-வினர்மீது டி.ஜி.பி-யிடம் கொடுக்கப்பட்டிருக்கும் புகார் நகலை போலீஸாரிடம் கொடுத்துள்ளேன். மேலும், தமிழகத்தில் சமீபத்திய கைதுகள் கருத்துரிமையைப் பறிக்கும் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன. ஆனால், இந்தக் கைதுகளை நீதிமன்றங்கள் ஏற்பதில்லை” என்றார்.

Advertisement