கத்தி படத்திற்கு கையாண்ட அதே யுத்தியை “சர்கார் ” படத்திற்கும் கையாளும் முருகதாஸ்..! ஆச்சர்யமான ஒற்றுமை தான்..!

0
195

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் “சர்க்கார்” படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது . சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளது என்று ஏற்கனவே தகல்களும் வெளியாகி இருந்தது.

KATHI

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா படு பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும், இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் இசை வெளியிட்டு விழாவிற்கு பிறகு தொடர்ச்சியாக படத்தின் சில போஸ்டர்களையும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. இதில் என்ன ஆச்சர்யம் என்றால், இந்த படத்திற்க்கும் விஜய் – முருகதாஸ் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த “கத்தி” திரைப்படத்திற்கும் எதார்த்தமான விடயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Sarkar teaser

அது என்னவெனில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான “கத்தி” படத்தின் டீசரும் அக்டோபர் 19ஆம் தேதி தான் வெளியாகி இருந்தது. அதே போல “சர்கார்” தீபாவளியன்று வெளியாவது போன்றே “கத்தி” படமும் தீபாவளி அன்று தான் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.