அதுக்குள்ள End ஆ – பெரும் வருத்தத்தில் ரேஷ்மா – மதன் ரசிகர்கள்.

0
167
Madhan
- Advertisement -

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் அபி டெய்லர் சீரியல் கூடிய விரைவில் முடிவடைய போகிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதுப்புது வித்தியாசமான தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் அபி டைலர் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் ரேஷ்மா- மதன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த தொடரின் மூலம் தான் ரேஷ்மா மற்றும் மதன் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள் . மதன் முன்னாடியே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இருந்தாலும் பூவே பூச்சூடவா சீரியலில் மூலம் ரேஷ்மா மற்றும் மதன் இருவருமே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடம் பிடித்து இருந்தார்கள். பின்னர் இந்த சீரியல் முடியும் நேரத்தில் இருவரும் காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.

- Advertisement -

ரேஷ்மா மற்றும் மதன்:

இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஷாக்கிங் ஏற்படுத்தி இருந்தது. மேலும், பூவே பூச்சூடவா சீரியல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அபி என்ற பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தை மையப்படுத்திய கதை. இதற்கு அசோக் உறுதுணையாக இருக்கிறார். அபி ரோலில் ரேஷ்மாவும், அசோக் ரோலில் மதன் நடித்து வருகிறார்.

அபி டெய்லர் சீரியல்:

சீரியல் தொடங்கிய நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனிடையே ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் சேர்ந்து அபி டெய்லர் சீரியலில் நடித்து கொண்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

சீரியலின் கதை:

தற்போது சீரியலில் வில்லி அனாமிகா கோவில் அன்னதானத்தில் விஷத்தை கலந்து அசோக் குடும்பத்தை அழிக்க நினைக்கிறார். ஆனால், கடைசியில் விஷம் அவர் குடிக்கும் ஜூஸில் கலக்கப்படுகிறது. அனாமிகா இறக்கிறாரா? அசோக் குடும்பம் தப்பித்தார்களா? போன்ற பல திருப்பங்களுடன் கிளைமாக்ஸ் நோக்கி சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் சீரியல் கூடிய விரைவில் முடிய உள்ள தகவல் வைரலாகிவருகிறது.

அபி டெய்லர் சீரியல் முடிவு:

அதாவது, அபி டெய்லர் சீரியலின் க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது. வரும் 20ம் தேதியுடன் இந்த சீரியல் முடிய இருப்பதாக கலர்ஸ்-தமிழ் அறிவித்திருக்கிறது. அதோடு இதற்கு காரணம், இந்த சீரியல் இரவு ஏழு முப்பது மணிக்கு ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், புதிதாக தொடங்கப்பட்ட பச்சைக்கிளி சீரியலுக்காக இந்த சீரியலின் நேரம் மாற்றப்பட்டிருக்கிறது. இதனால் அபி டெய்லர் சீரியலின் டிஆர்பி குறைந்து உள்ளது. ஆகவே, அபி டெய்லர் சீரியலை முடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement