வாத்தி கம்மிங் பாடலுக்கு யாரும் இப்படி நடனமாடல- அசத்திய ஜெயம் ரவி பட நடிகை.

0
1815
samyuktha
- Advertisement -

தமிழகமே தளபதி விஜய்யின் 46-வது பிறந்தநாளை சோசியல் மீடியாவில் பயங்கரமாக கொண்டாடி இருந்தது. உலகம் முழுவதும் தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். இந்த வருடம் நாடே கொரோனா அச்சுறுத்தலில் இருப்பதால் விஜய் பிறந்தநாளை விமர்சனமாக கொண்டாட முடியாமல் போனது. இருந்தாலும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஸ்பெஷலான போஸ்டர்கள் மற்றும் ஹேஷ்டேக்குகளை வெளியிட்டு தளபதி விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடி இருந்தனர்.

ரசிகர்கள் முதல் முன்னணி திரைபிரபலங்கள் வரை என பலரும் சமூகவலைதளங்களில் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி பதிவிட்டு இருந்தார்கள். விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ், சதீஸ் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அவர்கள் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு வித்தியாசமான நடனமாடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும், நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் இந்த வித்தியாசமான வாழ்த்து வீடியோ ரசிகர்கள் மத்தியில் லைக்ஸைப் பெற்று வருகிறது. நடிகை சம்யுக்தா அவர்கள் வாட்ச் மேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் கோமாளி, பப்பி உள்ளிட்ட சில படத்தில் நடித்துள்ளார்.

samyuktha

இவர் 2016-ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படம் மூலம் தான் சினிமாவில் நடிகையானவர். இவர் பெங்களூரை சேர்ந்தவர். தற்போது இவர் தீயல் என்ற படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement