‘கேவலமா இருக்க’ கூட்டத்தில் இருந்து கேலி செய்த நபர் – கூலாக பதிலடி கொடுத்த கோமாளி பட இயக்குனர்.

0
539
pradeep
- Advertisement -

உருவத்தை கேலி செய்த கும்பலுக்கு கோமாளி பட இயக்குனர் கொடுத்துள்ள பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் பாராட்டுகளை குவித்து வருகிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த படம் “கோமாளி”. இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த படத்தில் ரீதிகா மோகன், கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார்.

- Advertisement -

கோமாளி படம்:

படத்தில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி இருந்தார் இயக்குனர். மேலும், இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதோடு, வசூலிலும் நல்ல வேட்டை ஈட்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் நடித்திருக்கிறார்.

லவ் டுடே படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் உருவ கேலி குறித்து பிரதீப் பேசி உள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதீப் கலந்து கொண்டிருந்தார்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் பிரதீப் சொன்னது:

அதில், நிகழ்ச்சி தொகுப்பாளனி எப்படி இருக்கீங்க? என்று பிரதிபிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் வித்தியாசமான உடல் மொழியை காட்டி சூப்பராக இருக்கேன் என்று பதில் அளித்திருந்தார். அப்போது சிலர் கேவலமாக இருக்கீங்க? என்று குரல் கொடுத்திருந்தார்கள். ஆனால், இதைக் குறித்து பிரதீப் கோபப்படாமல் கூறியிருந்தது, கேவலமாக இருக்கிறேன் என்பதை நான் சிறு வயது முதலே கேட்டு இருக்கிறேன். இது புதிய விஷயம் இல்லை. ஆனால், இந்த மேடையில் நான் நிற்பது எனக்கு புதியது என்று பேசியிருந்தார்.

பாராட்டும் ரசிகர்கள்:

இப்படி ஒரு பேச்சைக் கேட்டவுடன் ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்து பாராட்டியிருந்தார்கள். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே, நிகழ்ச்சி ஒன்றில் பிரதீப் அவர்கள் மூத்த இளைஞர்களுக்கு எல்லாம் அறிவை வழங்கியிருந்தார். முதல் ஸ்டெப் தாண்ட தான் கஷ்டமாக இருக்கு. மத்ததெல்லாம் ஈசிதான். எப்படியாவதும் மேலே ஏறி வந்துருங்க என்றெல்லாம் பேசியிருந்தார். இப்படி இவர் எந்த ஒரு விஷயத்தையும் பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு பேசியிருக்கும் விஷயம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement