இயக்குனர் ஆவதர்க்கு முன் ஜில்லா, சுறா படத்தை கேலி செய்து கோமாளி பட இயக்குனர் போட்ட பதிவு – தற்போது தோண்டி எடுத்து திட்டும் ரசிகர்கள்.

0
913
pradeep
- Advertisement -

விஜய் படம் குறித்து கோமாளி பட இயக்குனர் போட்ட பழைய பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. சமீப காலமாகவே நடிகர் ஜெயம் ரவி அவர்கள் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளிவந்த படம் “கோமாளி”. இந்த படத்தை குறும் பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் என்பவர் தான் இயக்கி இருந்தார் . இதுவே அவர் இயக்கிய முதல் படம் ஆகும். இந்த படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. கோமாளி படத்திற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் இவர் விஜய் குறித்து கேலி செய்து போட்ட பதிவு விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தளபதி விஜய். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

- Advertisement -

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பிளாக் பஸ்டர் ஹிட் தான். அதே போல இவரது ஒரு சில படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களுக்கு அது வெற்றிப்படம் தான். அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படம் விஜய் ரசிங்கர்களுக்கு வெற்றிப்படம் தான். 2014 ஆம் ஆண்டு நேசன் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த படம் ஜில்லா.இந்த படத்தில் மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இப்படி ஒரு நிலையில் ஜில்லா படத்தின் போது யூடுயூபர் பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜில்லா படம் குறித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் ‘சமீப காலத்தில் விஜய் செய்த சிறந்த டப்பிங் ஒன்று. எவ்வளவு மாடுலேஷன், எவ்வளவு முயற்சி’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு கோமாளி பட இயக்குனர் பிரதீப் ‘அட பாவி, சுறா பார்ட் 2 டப்பிங் மாறி இருந்துச்சி டா. உன்னோட ரசனை என்னனென்னு எனக்கு தெரியும். Mr சுறா பேன் என்று பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இவரின் இந்த பதிவிற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் இருந்து கண்டனங்கள் எழ, அந்த பதிவை நீக்கிவிட்டார் பிரதீப். இருப்பினும் இவரை விஜய் ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். அதே போல இவர் ஏற்கனவே விஜய்யின் துப்பாக்கி மற்றும் அஜித்தின் மங்காத்தா படத்தை ஒப்பிட்டு போட்ட பழைய பதிவு ஒன்றையும் தற்போது குறிப்பிட்டு வருகின்றனர். அந்த பதிவில் பிரதீப் பதிவிட்டுள்ளதாவது ‘அஜித்தின் சிறந்த படம் வந்தாலே அதை துப்பாக்கி படத்துடன் ஒப்பிடுகின்றனர். என்னை பொறுத்த வரை எப்போதும் மங்காத்தா தான்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Comali

தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்து இருக்கிறார். மேலும், படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான ‘அரபிக் குத்து’ வேற லெவலில் ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடல் நாளை வெளியாக இருக்கிறது.

Advertisement