அப்பா சாவ பாக்க போம்போது பாட்டு கேட்டுட்டு, நெய் ரோஸ்ட் சாப்பிட்டு போனேன் – கோமாளி பட நடிகை. கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
883
anandhi

இறந்த தனது அப்பாவின் உடலை பார்க்கச் சென்ற போது பாட்டு கேட்டுக்கொண்டு நெய் தோசை சாப்பிட்டதாக பிரபல ஆர் ஜேவும் நடிகையுமான ஆனந்தி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே எஸ் ரவிகுமார் போன்ற பலர் நடித்த இந்த படத்தின் யோகி பாபுவின் மனைவியாகவும் ஜெயம் ரவியின் தங்கையாகவும் நடித்தவர் பிரபல ஆர் ஜேவான ஆனந்தி.

கோமாளி படத்திற்கு பின்னர் பிகில், சூரரரை போற்று உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். இவர் ஒரு தீவிர புத்தகப் பிரியர். மேலும், இவர் ‘The Book Show’ என்ற யூடுயூப் சேனலையும் நடத்தி வருகிறார். இந்த சேனலை 2.5லட்சம் பேர் பின்தொடர்ந்து இருக்கின்றனர். இந்த சேனலில் இவர் பல விதமான புத்தகங்கள் குறித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

அதே போல புத்தகம் படிப்பது குறித்த முக்கியத்துவம் மற்றும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் பங்கேற்ற பேட்டி ஒன்றில் புத்தகம் படிப்பதனால் தனது தந்தையின் மரணத்தின் போது தான் நடந்து கொண்ட விதம் குறித்து இவர் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியபட வைத்துள்ளது. இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது.

சென்னையில் இருந்து கோயம்பத்தூருக்கு அப்பாவின் உடலை பார்க்க காரில் போனேன். கோயம்பத்தூர் போகும் வரை எனக்கு பிடித்த பாட்டை எல்லாம் கேட்டுக்கொண்டே போனேன். வழியில் நெய் ரோஸ்ட் சாப்பிட்டேன். இது போன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என்பது நமக்குத் தெரியாது. இதை யாரும் சொல்லிக் கொடுக்க வில்லை ஆனால், இவையெல்லாமே ஒரு புத்தகத்தில் இருந்து கிடைக்கும் ஒரு விஷயமாக இருக்கும். இங்கே இருந்து நான் என்னுடைய அப்பாவை போய் பார்க்கும் போது இது ஒரு இயற்கையான விஷயமாகத் தான் தெரிந்தது.

-விளம்பரம்-

அப்பாவின் முகத்தைப் பார்க்கும் போது கூட இதுதானே வாழ்க்கை இப்படித்தானே முடியும் என்று தோன்றியது. என் அப்பாவை நினைத்து நான் அழலாம், ஆனால், இது எனக்கும் நடக்கலாம். அப்பாவின் சடங்கு நடக்கும் போது அங்கே மழை தூறியது அழகை ரசிக்க அப்பா இல்லை. வெயில் அடிக்கிறது காற்று அடிக்கிறது. அவ்வளவு அழகாய் இந்த உலகம் இருக்கிற.து இதற்கெல்லாம் நடுவில் அப்பா இருக்கிறார். ஆனால், அவரால் எதையும் உணர முடியவில்லை. இதேபோல நம்முடைய நிஜமான வாழ்க்கையில் செய்திருப்போம்.

சூரியன் அழகாக இருக்கும் நிலா அழகாக இருக்கும் ஆனால் இதை எதையும் பார்க்காமல் நாம் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்போம். இதுவா வாழ்க்கை, இருக்கும் தருணத்தை அனுபவியுங்கள். இதை போன்ற விஷயங்களை புத்தகங்கள்தான் சொல்லிக் கொடுக்கும் புத்தகங்கள் என்னுடைய வாழ்க்கையை ரசிக்க உதவியிருக்கிறது என்று பேசியுள்ளார். ஆனந்தியின் இந்த பேச்சை கண்ட சிலர், அப்பா இறந்த போது எப்படி பாடல் கேட்க தோன்றும், நெய் தோசை சாப்பிட தோன்றும் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Advertisement