ஊரடங்கில் கூட வீடியோ கால் மூலம் படு கிளாமரான போட்டோ ஷூட் நடத்திய கோமாளி பட நடிகை.

0
5840
Samyuktha
- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் தான் தலைவிரித்து ஆடுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பின்பற்றபட்டு வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். மேலும் ஊரடங்கு உத்தரவால் பல்வேறு தொழில்களை போல சினிமா தொழிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பிரபலங்களும் வீட்டில் இருந்தபடி பொழுதை கழித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், நடனமாடி வீடியோ வெளியிடுவது, பாடல் பாடுவது, யோகா செய்வது, சமையல் செய்வது என்று செய்து பொழுதை கழித்து வருகின்றனர். ஆனால், கோமாளி பட நடிகை வித்யாசமாக போட்டோ ஷூட்டை நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தமிழில் கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த படம் “கோமாளி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அதிலும் இந்த படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக வரும் பகுதியில் ஜெயம் ரவிக்கு காதலியாக முதல் பாதி முழுதும் தோன்றிய இவர் ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தவர நடிகை சம்யுக்தா. கோமாளி படத்தில் காஜல் அகர்வாலை விட இவர் தான் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தார். கோமாளி படத்தை தொடர்ந்து “பப்பி” என்ற படத்தில் நடித்தார்.

View this post on Instagram

? . . . #lastintheseries

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on

சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியாக போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவால் பிரபலங்கள் பலரும் வீட்டில் இருப்பதால் யாரும் போட்டோ ஷூட்களை இல்லை. ஆனால், இவரோ ஊரடங்கிலும் போட்டோ ஷூட்டை வித்யாசமாக நடத்தியுள்ளார்.

-விளம்பரம்-

அதுவும் எப்படி வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு படு கிளாமரான ஆடை அணிந்து போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார் அம்மணி. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து மற்ற நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தினால் நன்றாக இருக்கும் என்பது தான் அனைவரின் மைண்ட் வாய்ஸ்.

Advertisement