மதுரை முத்து தன்னுடைய சொந்த முயற்சியில் நூலகம் திறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்பவர் மதுரை முத்து. இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அரசம்பட்டி என்ற ஊரில் பிறந்தவர். இவர் சிறு வயதில் இருந்தே சிறந்த பேச்சாளராக இருந்து இருக்கிறார். பின் இவர் பல மேடைகளில் பேசி மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதோடு பல பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இவர் இருந்திருக்கிறார்.

அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மதுரை முத்து சின்னத் திரைக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி வந்தார். கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு, காமெடி ஜங்ஷன் போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மதுரை முத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த பிரபலத்தின் மூலம் இவர் திரைப்படங்களில் சின்னச்சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தும் சினிமாவில் இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றவுடன் மீண்டும் மதுரை முத்து சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.
மதுரை முத்து குறித்த தகவல்:
அதன் பின் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமாகிக் கொண்டிருக்கும் குத் வித் கோமாளி முதல் சீசனில் மதுரை முத்து கோமாளியாக வந்திருந்தாலும் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து இருந்தார். அதன் பின் இவர் கெஸ்ட் ரோலில் கலக்கி கொண்டு இருக்கிறார். தற்போது இவர் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறார். இதனிடையே மதுரை முத்து அவர்கள் லேகா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவருக்கு இரண்டும் பெண் குழந்தைகள் இருக்கிறது. இவருடைய மனைவி லேகா 2016ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்தார். பின் மதுரை முத்து சில மாதங்கள் கழித்து தனது மனைவியின் தோழியான பல் மருத்துவர் நீத்து என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

மதுரை முத்து கட்டிய கோவில்:
இதற்கு பலரும் விமர்சித்து இருந்தார்கள். மேலும், சில மாதங்களுக்கு முன் மதுரை முத்து அவர்கள் இறந்து போன தன்னுடைய தந்தை ராமசாமி மற்றும் தாய் இருளாயி மற்றும் முதல் மனைவி லேகாவிற்கு திருமங்கலம் அருகே அரசப்பட்டி கிராமத்தில் தான் கோயில் கட்டி இருந்தார். இந்த கோயில் சித்திரை முதல் தமிழ் புத்தாண்டு தினத்தில் திறந்து வைத்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நகைச்சுவை பிரபலங்கள், சின்னத்திரை நடிகர்கள், பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மதுரை முத்து அவர்கள் தன்னுடைய சொந்த கிராமத்தில் உள்ள தன்னுடைய பூர்வீக வீட்டினுடைய ஒரு பகுதியை இலவச நூலகம் கட்டி இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=lU4r1OcOEUI
நூலகம் திறந்த முத்து:
அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கும் திறந்து வைத்திருக்கிறார். இதை பலரும் பாராட்டி வருகிறார்கள். கிராம மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த நூலகத்தை மதுரை முத்து திறந்து வைத்திருக்கிறார். பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மதுரை முத்து, இன்று நான் உலகத்தினுடைய பல நாடுகளுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறேன். உலகம் முழுக்க சுற்றினாலும் ஷூட்டிங், நிகழ்ச்சி என்று சென்னையிலேயே இருந்தாலும் எனக்கு அரசப்பட்டியில் இருக்கிற பீல் கிடைக்காது. அந்த அளவிற்கு என்னுடைய சொந்த ஊர் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதனாலே சின்ன சின்ன உதவி நாளும் எங்க ஊரை சுற்றியே செய்து கொண்டிருக்கிறேன். நான் நூலகம் திறந்து இருக்கிறேன். எங்கள் ஊர் கிராமமாக இருந்தாலும் இங்கு இருந்து நிறைய பேர் அரசு வேலைகளுக்காக முயற்சி செய்து சென்று இருக்கிறார்கள்.
நூலகம் திறக்க காரணம்:
என்னுடைய அண்ணனும் காவல்துறை அதிகாரி தான். கலக்கப்போவது யாரு ராமர் எங்க மதுரை ஏரியா தான். அவர் படித்து கிராம நிர்வாக அதிகாரியானார். இவர்கள் எல்லாம் உதாரணம். இன்று அரசு வேலைகளுக்கு தேர்வு எழுதுற ஆர்வம் எங்க ஊர் பசங்க மத்தியில் ரொம்ப அதிகமாக இருக்கு. என்னயுமே எங்க அப்பா படித்து சர்க்கார் வேலைக்கு போடான்னு தான் சொல்லிட்டு இருந்தான். அதேநேரம் ஊரில் படிப்பதற்கு பிள்ளைகளுக்கு ஏற்ற வசதிகளை அவர்கள் குடும்பங்களால் செய்து தர முடியாத சூழ்நிலை இருக்கு. எல்லாரையும் மதுரைக்கு போய் படிக்க வைக்க முடியுமா? அதனால் தான் போட்டி தேர்வுக்கு தேவைப்படுகிற புத்தகங்கள், செய்தித்தாள்கள் என்று எல்லாத்தையும் எங்கள் கிராமத்தில் கிடைக்கிற மாதிரி செய்யலாம் என நினைத்தேன். நூலகம் எல்லா நாளும் செயல்படுகிற மாதிரி எங்க குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் வேலை செய்கிறார் என்று கூறியிருக்கிறார்.





