தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபல காமெடி நடிகர் சுனில். இவருக்கு இந்த நோயா?

0
5004

டோலிவுட்டில் மிக பிரபலமான காமெடி நடிகர் சுனில் வர்மா. இவர் 1974 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆந்திராவில் பிறந்தவர். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தீவிர ரசிகர். இவருக்கு சிறு வயதிலிருந்தே நடனத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர். அதனாலேயே இவர் பல நடனம் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்குவர். இவருடைய ஆசிரியரின் அறிவுரையின் படி தான் கலைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். பிறகு நடிகர் சுனில் அவர்கள் முதன் முதலாக மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். மேலும், 1995 ஆம் ஆண்டு இவர் சினிமா உலகில் நடன கலைஞராக நுழைந்தார். அதற்குப் பிறகு தான் சுனில் அவர்கள் நகைச்சுவை நடிகராக வாய்ப்புகள் கிடைத்தது. பின் படிப்படியாக இவருடைய நகைச்சுவை பேச்சுக்கும், திறமைக்கும் சினிமாவில் பட வாய்ப்புகள் வந்தது. அது மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடிகர் சுனில் வர்மா நடித்து உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சுனில் அவர்கள் கோடிக்கணக்கான அளவில் பெற்று வந்தார். டோலிவுட்டில் மிகப் பிரபலமான காமெடி நடிகராக இருந்த சுனில் அவர்கள் அந்தால ராமுடு என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன் முறையாக கதாநாயகனாக நடித்தார். பிறகு 2010 ஆம் ஆண்டு இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் மரியாத ராமன்னா என்ற திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்து உள்ளார். தமிழில் சந்தானம் எப்படியோ அப்படி தான் தெலுங்கு சினிமா துறையில் சுனில். ஆரம்ப காலத்தில் காமெடி நடிகராக நடித்து வந்த சுனில் அதன் பின்னர் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார். அதற்காக கூட தனது உடலை படு பிட்டாக மாற்றினார்.

இதையும் பாருங்க : நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படதில் குடும்ப குத்து விளக்காய் நடித்த நடிகை காயத்ரியா இது.

- Advertisement -

ஆனால், இவருக்கு சரியாக படங்கள் அமையவில்லை. இவர் கடைசியாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்த படம் Ala Vaikunthapuramulo. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சுனில் நடித்து இருந்தார். இந்நிலையில் நடிகர் சுனிலுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் இவர் தற்போது ஹைதராபாத்தில் உள்ள Gachibowli’s Asian Institute of Gastroenterology என்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு இவருக்கு பெரிய பிரச்சனை என்று கூட சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது. ஆனால், இவர் சைனஸ் பிரச்சினையால் தான் பாதிக்கப்பட்டு உள்ளார் மருத்துவர்கள் அறிவித்து உள்ளார்கள். மேலும், மருத்துவர்களின் உதவியோடு தற்போது நடிகர் சுனில் அவர்கள் குணமாகி வருகிறார். ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் இவர் சீக்கிரம் குணமடைய பிராத்தனை செய்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement