சினிமாகாரன்னு பொண்ணு தரல, நானே தான் சமைச்சி சாப்பிட்டு இருக்கேன் – பாழடைந்த வீட்டில் தனியாக வாழ்ந்து வரும் காமெடி நடிகர்.

0
265
- Advertisement -

திருமணம் செய்யாமல் தனித்தியாக வாழ்ந்து வரும் பாவா லக்ஷ்மணன் அளித்திருக்கும் உருக்கமான பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகராக வலம் வருபவர் பாவா லட்சுமணன். இவர் பெரும்பாலும் வடிவேலு காம்பினேஷனில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் இவர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஆனால், சில ஆண்டுகளாகவே இவர் படங்களில் பெரிதாக நடிப்பதில்லை. தற்போது இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அதோடு பொருளாதார நெருக்கடியினாலும் பாவா லக்ஷ்மண் தவித்து வாடிக் கொண்டு வருகிறார். தற்போது இவர் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இவர் ஒரு பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அவர், சில வருடங்களாகவே எனக்கு சுகர் பிரச்சனை இருக்கிறது.

- Advertisement -

பாவா லக்ஷ்மணன் அளித்த பேட்டி:

சுகர் கண்ட்ரோல் மீறிப் போனதால் கடந்த பத்து நாட்களாக ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வருகிறேன். மருத்துவர்கள் டெஸ்ட் எல்லாம் எடுத்து பார்த்துவிட்டு பாதிப்பு அதிகமாகிவிட்டது என்று கட்டைவிரலை எடுத்து ஆகணும் என்று சொல்லிவிட்டார்கள். ஆப்ரேஷன் எல்லாம் பண்ணி விரலை எடுத்து விட்டோம். ஆனால், அந்த காயம் சரியாகுவதற்கு நான்கு ஐந்து மாதம் ஆகும் என்று சொன்னார்கள்.

சிகிச்சை குறித்து சொன்னது:

ஏற்கனவே வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் நண்பர்கள் உதவியால் தான் நாட்களை தள்ளிக் கொண்டிருக்கிறேன். ஆறு மாதமாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்போது கட்ட விரலையும் எடுத்து விட்டார்கள். இந்த வலியை விட வாய்ப்பு கிடைக்காது தான் பெரிய வலியாக இருக்கிறது. காயம் எல்லாம் சரியான பிறகுதான் வாய்ப்பு தேட முடியும். அதுவும் கிடைக்குமா என்று தெரியவில்லை. உதவுவதற்கு என்னை பெத்தவங்களும் உயிரோடு இல்லை.

-விளம்பரம்-

சினிமா குறித்து சொன்னது:

நடிகர் என்றால் நிறையும் சம்பளம் வாங்குவார்கள் என்று வெளியில் நினைப்பார்கள். ஆனால், என்னை மாதிரி துணை நகைச்சுவை நடிகர்களோட சம்பளம் ரொம்ப குறைவு தான். கம்பெனியை பொறுத்துதான் ஐந்தாயிரம் பத்தாயிரத்துக்கு வரைக்கும் கொடுப்பார்கள். பட வாய்ப்புகளும் எப்போதாவது தான் வரும். இந்த பணத்தை வைத்துக்கொண்டு தான் சென்னையில் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது தனியார் மருத்துவமனை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அதனால்தான் அரசு மருத்துவமனையில் வந்து சேர்ந்தேன்.

குடும்பம் குறித்து சொன்னது:

நீங்க நல்லா பார்த்துக் கொள்கிறார்கள். ஆனாலும், டிஸ்சார்ஜ் ஆன பிறகும் மருந்து, மாத்திரைகள், சாப்பாடு செலவு என்று ஏகப்பட்ட செலவிருக்கிறது. எங்களை மாதிரி நலிவடைந்த கலைஞர்களுக்கு திரைத்துறையினர் தான் உதவி செய்ய வேண்டும். எனக்கு இப்போது 58 வயதாகிறது. திருமணமே பண்ணிக் கொள்ளவில்லை. குழந்தைகள் இருந்தால் நான் ஏன் உதவி கேட்க போகிறேன். எனக்கு ஒரே ஒரு அக்கா தான் இருக்கிறார்கள். அவர்களும் சொல்லிக்கிற அளவுக்கு வசதி எல்லாம் கிடையாது. அதனால்தான் திரைத்துறையிடம் உதவியை எதிர்பார்க்கிறேன் என்று வேதனையுடன் கூறி இருந்தார்.

Advertisement