சினிமாவில் அறிமுகமாக உள்ள காமெடி நடிகர் சாம்ஸ்சின் மகன் – இவருக்கு இவ்ளோ பெரிய மகனா ?

0
1136
chams
- Advertisement -

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள் விஜய் சூர்யா துவங்கி விக்ரம் மகன் துருவ் வரை தமிழ் சினிமாவில் எண்ணற்ற வாரிசு நடிகர்கள் இருந்து வருகிறார்கள். மேலும், சமீப காலமாகவே தற்போது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள். சமீபத்தில்கூட அருண் விஜய்யின் மகன் சூர்யா தயாரிக்கும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது. ஹீரோக்களின் வாரிசு ஒரு பக்கம் நடிகர்களாக களமிறங்கினாலும் இன்னொரு ஒரு காமெடி நடிகர்களும் தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-
 ரசிகர்கள் தனக்கு அளித்த ஆதரவைப் போலவே தனது மகனுக்கும் ஆதரவு தர வேண்டும் என்றும் சாம்ஸ் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாகேஷ் துவங்கி தம்பிராமையா, எம் எஸ் பாஸ்கர் வரை பல்வேறு காமெடி நடிகர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல காமெடி நடிகரான சாம்ஸ் மகனும் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சாம்ஸ். அந்த படத்திற்கு பின்னர் வேறு படங்களில் நடித்திருக்கிறார் இவர் மறைந்த பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் மகன் என்று தான் பலரும் நினைத்தார்கள்.

- Advertisement -

பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது ஒரு சில படங்களில் இவர் ஒரு சில காட்சிகளில் நடித்தாலும் கூட இவரது காமெடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்று இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் இவரது மகன் யோகன் தற்போது சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும், சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குநர் பயிற்சியையும் முடித்துள்ளாராம் யோஹன்.

இந்நிலையில் தற்போது நடிகராக களம் இறங்க தயாராகி விட்டதாக நடிகர் சாம்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.ரசிகர்கள் தனக்கு அளித்த ஆதரவைப் போலவே தனது மகனுக்கும் ஆதரவு தர வேண்டும் என்றும் சாம்ஸ் ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இதை பார்த்த பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துவருவதோடு நடிகர் சாம்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகனா என்று வியப்படைந்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement