மாஜிஸ்திரேட் உடன் ஏற்பட்ட சண்டையில் நகைச்சுவை நடிகர் ஜெயமணி கைது செய்து இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்தவர் ஜெயமணி. ஆரம்பத்தில் இவர் அரசு வேலையில் தான் பணியாற்றியிருந்தார். பின் நடிப்பின் மீது இருந்த ஆசையால் இவர் சினிமாவுக்குள் நுழைந்தார்.
இவர் பார்ப்பதற்கு அப்படியே நகைச்சுவை நடிகை செந்தில் போல் இருப்பார். அதோடு இவர் நடிகர் செந்திலின் உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஜெயமணி அவர்கள் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த சாது என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் இவர் வடிவேலும் உடன் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ஜெயமணி திரைப்பயணம்:
இருவரின் நடிப்பில் வரும் காமெடிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. அதோடு இவரை சினிமா திரையில் தூக்கி விட்டது லக்கிமேன் படத்தில் தான். பின் இவர் கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பல பிரபலங்கள் உடன் இணைந்து காமெடி நடிகராக நடித்திருக்கிறார். மேலும், இவர் 23 வருடங்களுக்கும் மேலாக சினிமா நடித்து இருந்திருக்கிறார். இருந்தாலும், சரியான அங்கீகாரம் இவருக்கு கிடைக்கவில்லை.
ஜெயமணி பேட்டி:
பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை. இந்நிலையில் நடிகர் ஜெயமணி அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர், தன்னுடைய சினிமா பயணம் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் ஜெயமணி கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மாஜிஸ்திரேட் உடன் தகராறு:
அதாவது, நடிகர் ஜெயமணி அவர்கள் தன்னுடைய நண்பர் மாரிமுத்துவுடன் சில தினங்களுக்கு முன்பு வேளச்சேரி பீனிக்ஸ் மால் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவில் வாக்கிங் செய்திருக்கிறார். அப்போது அங்கு உடற்பயிற்சி செய்து இருந்த மாஜிஸ்திரேட் திருமால் என்பவரை தகாத கெட்ட வார்த்தைகளால் ஜெயமணி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மாஜிஸ்திரேட் திருமால் போலீசில் ஜெயமணி மீது புகார் அளித்திருக்கிறார்.
கைதான ஜெயமணி:
அந்த புகாரின் பேரில் ஜெயமணி தன்னை ஆபாசமாக திட்டுதல், மிரட்டல், சட்ட விரோதமாக தடுத்து நிறுத்தல் போன்ற பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கின்றார்கள். இந்த நிலையில் இன்று ஜெயமணி மற்றும் அவருடைய நண்பர் மாரிமுத்து ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்திருக்கின்றார்கள். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், எதற்காக ஜெயமணி மாஜிஸ்திரேட்டை திட்டினார்? பூங்காவில் என்ன நடந்தது? என்ற விவரம் தான் தெரியவில்லை.