கூப்பிட்ட குரலுக்கு மெரினா கடற்கரையில் குவிந்த 1000 காக்காய்கள் – அனைத்து பிராணிகள் பாஷைகளை பேசி அசத்தும் காமெடி நடிகர் காக்கா கோபால்.

0
1703
kakagopal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காக்கா கோபாலை தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகர் ஜீவா நடித்த ஆசை ஆசையாய் படத்தில் நடிகர் விவேக்கின் நண்பராக கோபால் நடித்திருப்பார். பின் இவர் மாதவனின் ரன் படத்திலும் காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராமல் உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்ற காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இவரை சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ரமேஷ்கண்ணா தான். இதனை தொடர்ந்து இவர் சில பல படங்களில் தான் நடித்து இருந்தார். பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், காக்கா கோபால் விலங்குகளிடம் மிகுந்த பிரியம் உடையவர் என்று சொல்லலாம். காகம், நாய், பூனை, எருமை, ஆடு என பல உயிரினங்களைப் போன்று மிமிக்ரி செய்வார்.

-விளம்பரம்-

அதுமட்டுமில்லாமல் விலங்குகளிடம் எப்படி பேசுவதும், அவர்களை எப்படி அழைப்பதும் போன்ற வித்தைகளை கற்று வைத்திருக்கிறார். ஒரு முறை அவர் மெரினா கடற்கரையில் இருந்து காகங்களை கூப்பிட ஒரு நொடியில் காகம் கூட்டமே வந்தது. அந்த வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அந்த அளவிற்கு கோபால் விலங்குகளின் மொழியை கற்றுக் கொண்டவர். மேலும், மனிதர்களைப்போல மிருகங்களுக்கும் பாஷை இருக்கிறது என்றும் அவர்களிடமும் பேசினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் கோபால்.

- Advertisement -

காக்கா கோபால் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் காக்கா கோபால் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சினிமா துறை பற்றியும், விலங்குகள் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எங்களை மாதிரி கலைஞர்களுக்கு சினிமா என்பது ஒரு விசிட்டிங் கார்டு. நான் படத்தில் காக்கா பிரியாணி காட்சியில் நடித்து இருப்பேன். அது இங்கே விட டெல்லியில் மிகப்பிரபலம். அங்கே ஒருவரிடம் இந்த காமெடியை பற்றி சொன்னதும் வியந்து விட்டார். அதோடு காமெடி பற்றி சொல்லி வீடியோ காண்பித்து உடனே நீங்கள் தானா அவரு என்று சொல்லி பாராட்டினார்.

சினிமாத்துறையை பற்றி கோபால் கூறியது:

அதுமட்டுமில்லாமல் நான் தங்குவதற்கும், சிறந்த சாப்பாடு என அனைத்து தேவைகளையும் செய்து தந்தார். அந்த அளவிற்கு நாம் வெளியில் சென்றால் நமக்கு ஒரு அறிமுகமாக சினிமா இருக்கிறது. பிரபலமான கலைஞர்களுக்கு அது வேற லெவல்ல இருக்கும். ஆனால், எங்களை மாதிரி சில படங்களில் நடித்த கலைஞர்களுக்கு சினிமாதான் விசிட்டிங் கார்டு. என்னைக்குமே கலை உலகம் தான் எல்லாம். எனக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்து இந்த வேலை செய்யுங்கள் என்று சொன்னால் நான் கண்டிப்பாக செய்ய மாட்டேன். ஆனால், நூறு ரூபாய் கொடுத்து சினிமாவில் இந்த காட்சியில் நடிங்க என்று சொன்னால் உடனே நடிப்பேன்.

-விளம்பரம்-

மகளை பற்றி சொன்ன கோபால்:

அந்த அளவிற்கு சினிமா மீது ஆர்வம், ஆசை என்று எல்லாம் சொல்லலாம். எனக்கு சினிமா தான் எல்லாமே. ஆனால், எனக்கான வாய்ப்புகள் அமையவில்லை என்பது நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது. சினிமாவை நான் நேசிப்பது போல் என் குடும்பமும் என்னை நேசிக்கிறார்கள். நான் சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சி கொண்டிருக்கும் போது என் குடும்பம் தான் என்னை பார்த்து கொண்டது. அதுவும் என் மகள் தான் என்னை பார்த்துக்கொண்டு வருகிறாள். என் குடும்பம் என்னை முழுதாக புரிந்து கொண்டு உறுதுணையாக நிற்கிறார்கள்.

மிருகங்கள் பாஷை கற்றுக்கொண்டது:

அதே போல் விலங்குகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் சிறுவயதில் இருக்கும் போதே பள்ளிக்கூடத்தில் இருந்து விலங்குகள் பேசும் பாஷை தெரியும். விலங்குகளுடன் பேசும் பாஷை புரிந்தது எப்படி கூப்பிடுவது என ஒவ்வொன்றையும் உன்னிப்பாக கவனித்து தான் பேச ஆரம்பித்தேன். உண்மையிலேயே மனிதர்களை போல தான் விலங்குகளும் பேசிக் கொள்கிறார்கள். நாம் அதைப் புரிந்து கொண்டால் போதும் நமக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள இணைப்பு நீண்டு போகும். எனக்கு பல மிருகங்களின் பாஷைகள் தெரியும் என்று கூறி ஒவ்வொரு மிருகத்தின் பாசைகக்கு குரல் கொடுத்திருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement