தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் எண்ணற்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் முத்துக்காளை. என் புருஷன் குழந்தை மாதிரி’ படத்தில் ‘செத்து செத்து விளையாடுவோமா..’ டயலாக்’ மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமடைந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் விட்டதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், நான் சாகவில்லை, நன்றாக தான் இருக்கிறேன் என்று பேட்டி கொடுத்துள்ளார் முத்துக்களை. அந்த பேட்டியில் பேசிய அவர், எனக்குச் சொந்த ஊர், ராஜபாளையம், சங்கம்பட்டி. என்னுடைய கனவு ஃபைட் மாஸ்டர்தான். ப்ரூஸ்லி, ஜாக்கிசான் படங்கள் என்னுடைய ஃபேவரைட்.
12 வயசிலேயே சண்டை கத்துக்க ஆரம்பிச்சுட்டேன். 18 வயசிலேயே கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கிட்டேன். 20 வயதில் கராத்தே வகுப்பு எடுத்தேன். கிட்டத்தட்ட 50 பேருக்கும் மேல் என்னிடம் கராத்தே கத்துக்கிட்டாங்க. ஸ்டண்ட் சிவா மாஸ்டர், வின்சன்ட் செல்வா, வடிவேலு. இவங்கதான் எனக்கான பாதையை சரியா அமைச்சுக் கொடுத்தவங்க. நான் நடித்த முதல் படம், முரளி நடித்த ‘இரணியன்’. அடுத்தது, பிரபு நடித்த ‘பொன்மனம்’ படத்தில்தான் காமெடி ரோலில் நடிக்க ஆரம்பிச்சேன்.
அந்த படத்தின் இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார். ஸ்டன்ட் பண்ணிட்டு இருந்த எனக்கு காமெடி செட் ஆகும்னு சொன்னது அவர்தான். அதுக்கப்புறம் தொடர்ந்து காமெடியில் நடிக்க ஆரம்பிச்சேன்.ஆரம்பத்தில் நடிக்கும் போது, எந்த நம்பிக்கையும் இல்லை. எனக்கு ஏற்கெனவே ஃபைட் என்கிற தொழில் இருக்கு. நடிப்பு வந்தா வரட்டும் வரலைனா போகட்டும் என்கிற ரீதியில்தான் கேமரா முன்னாடி நின்னேன். இதுவரை 240 படங்களுக்கும் மேல் நடிச்சிட்டேன் என்று கூறியுள்ளார்.