LICயில் வேலை, குழந்தை நட்சத்திரம்,1500 மேற்பட்ட படங்கள் – .நரசிம்மன் ஓமக்குச்சி நரசிம்மனான கதை

0
1242
Omakuchi
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருந்தும் சிலர் மட்டுமே நம்முடைய மனதில் நீங்காது இடம் பிடித்து விடுகின்றனர் அந்த வகையில் 80ஸ் தொடங்கி இன்று வரையில் காமெடி நடிகர்களில் பிரபலமான ஒருவரை சொல்ல வேண்டும் என்றால் காமெடி நடிகர் ஓமக்குச்சி நரசிம்மர் அவர்களை கூறலாம். இவருக்கு மற்ற நடிகர்களை போல நடிப்பதற்கு தேவைப்படும் உடலோ அல்லது முகபாவனையோ கிடையாது. ஆனாலும் தமிழ் சினிமாவை தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார்.சென்னையில் எல்.ஐ.சியில் பணியாற்றி கொண்டிருந்தவர்

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-120.jpg

இவர் தமிழ் சினிமாவில் கடந்த 1953ஆம் ஆண்டு கே.பி.சுந்தராம்பாள் நடிப்பில் வெளியான ஒளவையார் படத்தில் குழந்தை கதாபாத்திரக்காக தோன்றினார். அதற்கு பிறகு பல்வேறு நாடகங்களில் நடிக்க தொடங்கிய இவர் நாடக இயக்குனர் தில்லி ராஜாவின் ஒரு நாடகத்தில் கராத்தே பயில்வானாக நடித்தார். இவரின் கதாபாத்திரம் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதற்காக உண்மையான கரேத்தே வீரை யாமக்குச்சி என்ற பெயரை வைத்தனர்.

- Advertisement -

ஆனால் யாமகுச்சியை விட இவரது உருவம் ஒல்லியாக இருப்பதினால் ஓமக்குச்சி என பெயர் வைத்தால் காமெடியாக இருக்கும் என்று வைத்துள்ளனர். பின்னாளில் அதுவே இவரது பெயராக மாறியுள்ளது. இப்படி நாடகத்தில் நடித்து வந்த ஓமக்குச்சி பின்னர் கடந்த 1969ஆம் ஆண்டு வெளியான திருக்கல்யாணம் என்ற படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் ரஜினி கமல் காலகட்டம் தொடங்கி விஜய், அஜித் காலம் வரை காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானவர் நடிகர் ஓமக்குச்சி.

ஓமக்குச்சி மகன் :

14 மொழிகளில் 1500க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்த இவர், இறுதியாக 2006 ஆம் ஆண்டு சுராஜ் இயக்கத்தில் நடிகர் சுந்தர் சி நடித்த “தலைநகரம்” படத்தில் நடித்திருந்தார். அதற்கு பிறகு நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் கடந்த 2009ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தன்னுடைய 73வது வயதில் காலமானார். ஓமக்குச்சிக்கு சரஸ்வதி என்ற மனைவி இருக்கிறார் மேலும் மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார். ஆனால், இதுவரை அவர்களை யாரும் பார்த்தது இல்லை.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-119.jpg

ஓகுச்சியின் மகன் காமேஷ்வரா தற்போது சாமியாராக மாறிவிட்டாராம். சாய் பாபா, சித்தர்கள், இயேசுவை நேரில் சந்தித்திருக்கிறேன் என்று கூறியுள்ள அவர், அதன் பிறகு ஆன்மீகத்தை நானே நம்பத் தொடங்கினேன் என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது சென்னை திருவல்லிக்கேணியில் காமேஷ்வரா சுவாமி வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஓமக்குச்சியின் நினைவு தினம் கடந்த 11 ஆம் தேதி அவரது நினைவு தினம் எனபது குறிப்பிடதக்கது.

Advertisement