துணை இயக்குனராக பணியாற்றியுள்ள பிரபல காமெடி நடிகர் – யாருன்னு தெரியுதா ?

0
722
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் சதீஷிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-
Image
விடாது சிரிப்பு சீரியலில் சதிஷ்

நடிகர் சதிஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெர்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் ஆர்யா நடிப்பில் வெளியான மதரசாபட்டினம் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார் சதிஷ். ஆனால், இவர் சினிமாவில் நடிகராகும் முன்பாகவே நாடகங்களில் நடித்தவர்.

- Advertisement -

ஆம், காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர். இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

இதனைத் தொடர்ந்து ‘தமிழ்ப் படம், கொல கொலயா முந்திரிக்கா, மதராசபட்டினம், வாகை சூட வா, மகான் கணக்கு’ போன்ற சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார் சதீஷ். அதன் பிறகு சிவகார்த்திகேயனின் ‘மெரினா, எதிர் நீச்சல்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். இதில் ‘எதிர் நீச்சல்’ படத்தில் சதீஷின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

-விளம்பரம்-
Advertisement