ஆணும் பெண்ணும் சமம் கிடையாது, ஏன்னா பெண்கள் – மேடையில் சதீஷ் சொன்ன காரணம்.

0
331
- Advertisement -

சினிமாவில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு தனித்துவமான திறமை இருக்கும். ஆனால், அந்த திறமையையும் தாண்டி லக் என்ற விஷயமும் எப்போது வருகிறதோ, அப்போது தான் வாய்ப்புகள் குவியும். அப்படி குவியும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம். அவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பல சாதனைகள் செய்து வெற்றியடைகிறார்கள். இந்த லிஸ்டில் நடிகர் சதீஷிற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. நடிகர் சதிஷ், ஜித்தன் ரமேஷ் நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெர்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பல படங்களில் காமெடியான நடித்தார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி,விஜய், அஜித் சூர்யா என்று பலரின் படங்களில் காமெடியான நடித்த சதீஷ் ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதனை தொடர்ந்து பல படங்களில் காமெடியான நடித்து வரும் சதிஷ் ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் சேகர் படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவங்க எப்படி டிரஸ் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கிறது. ‘தர்ஷா குப்தா’ அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை சும்மா சொன்னேன்’ என்று தர்ஷா குப்தாவை கலாய்த்து இருந்தார்.

இவரின் இந்த பேச்சைக் கண்டு நிட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வந்தனர். பின்னர் இந்த சர்ச்சைக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் சதிஷ் ‘குடிமகான்’ என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் சதிஷ். அப்போது பேசிய அவர் ‘எனக்கு தண்ணீர் தான் என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்பதால் எந்த படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று நினைக்கிறேன்.

-விளம்பரம்-

அதற்காக நானும் இங்கே அறிவுரை சொல்ல நினைத்தேன். ஆனால், படத்தின் டிரைலரில் அதை சரியாக சொல்லி இருக்கிறார்கள். பள்ளி கல்லூரி காலங்களில் மதுப்பழக்கத்திற்கு ஆளாகாமல் இருந்தால் அதன் பின்னர் நாம் அதை தொடமாட்டோம். இதைப் பற்றி ஒரு சில கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட நான் பேசியிருக்கிறேன் அப்படித்தான் ஒரு பெண்கள் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றபோது அந்த கல்லூரியின் முதல்வர் குடி பழக்கங்களை பற்றி மாணவிகள் மத்தியில் பேச சொன்னார் .

அதை கேட்டதும் எனக்கு வேடிக்கையாக இருந்தது. இதைப் பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேட்டதற்கு, ஆண்களுக்கு சமமாக இந்த விஷயத்தில் பெண்களும் வளர்ந்து வருகிறார்கள் என்று அந்த முதல்வர் கூறினார். ஆண்களும் பெண்களும் ஒருபோதும் சமமானவர்கள் அல்ல, ஆண்களை விட பெண்கள் இன்னமும் கொஞ்சம் மேலானவர்கள் தான். சொல்லப்போனால் பெண்கள் அனைவரும் தெய்வத்திற்கு சமமானவர்கள்’ என்று கூறி இருக்கிறார்

Advertisement