சதீஷுக்கு கிடைத்த முதல் விருது தன் மகளுடன் அவரே பகிர்ந்த புகைப்படம் – என்ன இப்படி வளந்துட்டார்.

0
601
sathish
- Advertisement -

தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் ஓய்ந்த நிலையில் பல்வேறு காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர். இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார். அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-103-1024x592.jpg

மேலும், இவர் பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரேஸி மோகன் குழுவிலும் பணியாற்றியுள்ளார். சதிஷ் 2003 இல் வெளியான விடாது சிரிப்பு என்ற சீரியல் ஒன்றிலும் நடித்துள்ளார். இந்த காமெடி தொடர் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது. ஆனால் சில பல காரணங்களால் இந்த தொடர் 25 எபிஸோடகள் மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

- Advertisement -

2019 ஆம் நடைபெற்ற திருமணம் :

தற்போது யோகி பாபு மற்றும் சூரிக்கு இடையே பட வாய்ப்புகளை பிடிக்க போட்டி நடந்து வந்தாலும் சூரியை விட சதீஷ் அதிகபடியான பட வாய்ப்புகளை பிடித்து விடுகிறார். இப்படி ஒரு நிலையில் சதீஷுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு முன்னர் திருமணம் நடந்து முடிந்ததாக ஒரு செய்தி பரவியது. அதே போல இவர் கீர்த்தி சுரேஷுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளத்தில் வெளியானது.

மகளின் முதல் பிறந்தநாள் :

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சிந்து என்பவருடன் சதிஷுக்கு திருமணம் முடிந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு நடிகர் சதீசுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. நடிகர் சதீஷ் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. கோலாகலமாக நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

சதிஷ் ஹீரோவாக நடித்த முதல் படம் :

அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. நடிகர் சதீஷ் இறுதியாக நாய் சேகர் படத்தில் நடித்து இருந்தார். இதுவே அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் கிஷோர் குமார் இயக்கிஇருந்தார். மேலும், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் மரியம், ஸ்ரீமன், லிவிங்ஸ்டன், இளவரசு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-113.jpg

சதீசுக்கு கிடைத்த விருது :

இந்த படத்திற்கு அஜீஷும் மற்றும் அனிருத் இசை அமைத்து இருந்தார். பிரவீன் பாலு படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்காக சதீசுக்கு சிறந்த அறிமுக நடிகர் என்ற விருது கிடைத்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் தனக்கு கிடைத்த முதல் விருதுடன் தன் மகளுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Advertisement