காதல் செய்து தான் சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில்லை என்று சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சதீஷ் பேசியுள்ளார். காதலுக்கு எதிராக நடக்கும் ஆணவக் கொலைகளை எதிர்த்து தமிழ் சினிமாவில் கூட பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. சமீபத்தில்கூட பாவ கதைகள் என்ற பெயரில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்கள் ஆன வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கிய கதை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. என்ன தான் இப்படி ஆணவக் கொலைகள் குறித்து திரைப்படங்கள் வந்தாலும் தமிழகத்தில் அவ்வப்போது காதலுக்கு எதிரான ஆணவக் கொலைகள் நடந்து கொண்டுதான் வருகிறது. உடுமலைப்பேட்டை சங்கர் துவங்கி பல ஆணவக் கொலைகள் நடந்துள்ளது.

இப்படி ஒரு நிலையில்  சாதியை ஒழிக்க காதல் திருமணம் தான் என்றில்லை. அண்ணன் தங்கச்சியாக, அக்கா தம்பியாக பழகலாம் நல்ல நண்பர்களாக பழகினாலே சாதியை ஒழிக்கலாம் என்று காமெடி நடிகர் சதீஷ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் ஓய்ந்த நிலையில் பல்வேறு காமெடி நடிகர் சதீஷ் 8 வருடங்களாக கிரேசி மோகனிடம் உதிவியாளராக பணியாற்றியவர்.இவர் முதன்முதலில் ஏ. எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் என்ற காமெடி படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றினார்.

Advertisement

அதன் பின்னர் மதராஸபட்டினம், எதிர் நீச்சல், மான் கராத்தே போன்ற படங்களில் காமெடியனாக நடித்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு தான் நடிகர் சதீஷ் திருமணம்முடித்தார். இப்படி ஒரு நிலையில் திண்டுக்கல் பரணி சாலையில் இருக்கும் பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், பண்ணவே கூடாத விஷயம் ஒண்ணு இருக்குன்னா அது லவ். அது நமக்கு தேவையில்லாத சுமையை தரும்.

படிப்பையும் கெடுக்கும் உங்களின் நல்ல நட்பையும் கெடுக்கும் பெற்றோர்களுக்கு மிகப் பெரிய பிரச்சனையை உண்டாக்கும்.சாதி ஒழிவதற்கு காதல் திருமணம் தான் கரெக்ட் என்று சொல்வார்கள். சாதியை ஒழிக்க காதல் திருமணம் தான் என்றில்லை. அண்ணன் தங்கச்சியாக, அக்கா தம்பியாக பழகலாம் நல்ல நண்பர்களாக பழகினாலே சாதியை ஒழிக்கலாம்.எல் (L) என்றால் லாஸ், ஓ (O) என்றால் ஒன்னும் இல்லை. வி (V) என்றால் வேணாம். இ (E) என்றால் எதுக்கு?  என்று அர்த்தம் என்று கூறியுள்ளார் சதீஷ்.

Advertisement
Advertisement