தமிழ் சினிமா உலகில் எவர் கிரீன் நகைச்சுவை நடிகராக விளங்கியவர் செந்தில். சினிமா உலகில் நகைச்சுவை பார்ட்னர்ஸ் என்று கேட்டாலே சின்ன குழந்தை கூட கவுண்டமணி– செந்தில் என்று தான் சொல்லும். இவர்களுடைய காமெடிக்கு அடிச்சுக்க இன்னும் யாரும் வரவில்லை என்று தான் சொல்லணும். அப்போதெல்லாம் இவர்களுடைய நகைச்சுவைக்காகவே படம் பார்க்க தியேட்டர்களில் கூட்டம் குவியும்.
நகைச்சுவை நடிகர் செந்தில் அவர்கள் முதன் முதலாக மதுபான கடையில் தான் பணிபுரிந்தார். பின் நாடகங்களில் சேர்ந்து நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார். அதற்கு பிறகு 1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்முட்டியான் என்ற படத்தின் மூலம் தான் இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 1984 ஆம் ஆண்டு நடிகர் செந்தில் அவர்கள் கலைச் செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமசந்திர பிரபு என்ற இரு மகன்கள் உள்ளார்கள்.. இவருடைய மூத்த மகன் மணிகண்ட பிரபு ஒரு பல் மருத்துவர். இவர் தனது அப்பா, செந்தில் பெயரில் சாலிகிராமத்தில் தான் மருத்துவமனையை வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் செந்திலின் மணிகண்ட பிரபு ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருந்தார் என்று குறிப்பிடத்தக்கது.
இந்த படம் பூஜை எல்லாம் போட்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், என்ன காரணம் என்று தெரியவில்லை அந்த படம் அப்படியே நின்றுவிட்டது. இன்னொரு மகன் சினிமாட்டோகிராபி படித்து உள்ளார். மணிகண்ட பிரபுவிற்கு மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த் குமார்- உமையாள் தம்பதியின் மகளான டாக்டர் ஜனனி என்பவருடன் திருமணம் நடந்தது.
இவர்கள் திருமணம் மதுரை பிடிஆர் திருமண மகாலில் நடந்தது. திருமணத்தில் நடிகர் கவுண்டமணி அவர்கள் கலந்துகொண்டார். அதோடு கவுண்டமணி அவர்கள் அவர்களுக்கு தாலி எடுத்து திருமணத்தை தலைமை தாங்கியும் நடத்தினார். இப்படி ஒரு நிலையில் நடக்கிற செந்தில் அவர்கள் தனது மகன், பேத்திகளுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், இது மூத்த மகன் குழந்தைகளா இல்லை இளைய மகன் குழந்தைகளா என்பது தெரியவில்லை.