தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் சூரி. இவர் விவேக், சந்தானத்திற்கு பிறகு காமெடியில் முன்னணி நடிகராகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சீரியல் நடிகராக தான் இவர் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பின் இவர் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணில கபடி குழு படத்தின் மூலம் தான்.
அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஊரடங்குக்கு நடுவில் ஊரே அடங்கி இருக்கும் நிலையில் என் கருப்பன் நடந்து போனான் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : உங்க பிரச்சனையில கவின ஏன் இழுக்கிறீங்க? வனிதா மீது கடுப்பான கவின் ரசிகர்கள்.
சூரி அவர்கள் தன்னுடைய கருப்பன் என்கிற காளையை பிடித்துக்கொண்டு ஊரடங்கு வேளையில் சாலையில் நடந்து வந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும், இவரது காளை ஜல்லிக்கட்டில் கூட பங்குபெற்றுள்ளது.ஒட்டு மொத்த உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரே விஷயம் இந்த கொரானா வைரஸ் தான். இந்த கொரானா வைரஸ் பாதிப்பால் தற்போது இந்தியா ரஷ்யாவை முந்திக்கொண்டு மூன்றாம் இடத்தில் உள்ளது.
நாடே அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் கதிகலங்கி போய் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரபலங்களும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்