வடிவேலுவை போல அரசியலை நம்பி பாழாய் போன காமெடி நடிகை –  கண்டுகொள்ளாத தமிழ் நடிகர்கள், உதவிய தெலுங்கு சூப்பர் ஸ்டார்.

0
513
Vasuki
- Advertisement -

தமிழ் சினிமா எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்வு கொடுத்து. ஒரு பக்கம் ஓன்றுமில்லாதவர் கோடிக்கணக்கில் சம்பாதிக்க மறுபக்கம் கோடிகளில் புரண்டவர்கள் ஒன்றுமில்லாமல், சாப்பிடுவதற்க்கே கஷ்டப்படும் நிலைமையை நாம் பார்த்து வருகிறோம். அதே போல சினிமாவை விட்டு விட்டு அரசியலில் சென்ற பல நடிகர்கள் பின் நாளில் பல கஷ்டங்களை சந்தித்ததையும் பார்த்துள்ளோம். வடிவேலு கூட 10 ஆண்டுக்கு முன் நடைபெற்ற தேர்தலின் போது அதிமுக மற்றும் கேப்டனுக்கு எதிராக பேசியதில் இருந்து தான் சினிமாவில் இருந்தே காணாமல் போனார்.

-விளம்பரம்-

வடிவேலுவை போல ஒருவரை கூறவேண்டும் என்றால் நமது 90’ஸ் காமெடி நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் போன்ற காமெடி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் வாசுகியை கூறலாம். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் 150படங்களுக்கு மேலே நடித்திருக்கிறார். ஆனால் தற்போது நடிகை வாசுகி சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பணமின்றி இருந்து வருகிறார். பாஜகவில் கடசியில் சேர்ந்தால் பணம் கொடுப்பதாக சொன்னதால் பாஜகவில் இணைந்தேன் என்று பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

- Advertisement -

மேலும், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்ட வாசுகி சிறிது பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடத்திய ஒரு உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு. அந்தப் போராட்டத்தில் அவர் மைக்கை பிடித்து பேசியது கொஞ்சம் நெஞ்சம் அல்ல மைக்கை கையில் பிடித்த வேகத்தில் இன்றைய முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரை விமர்சித்து பேசினார். மேலும் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் எங்கள் எம்ஜிஆரை போல் தமிழ்நாட்டை ஆள வந்தவர் என அண்ணாமலையை புகழ்ந்து பேசினார்.

இந்த நிலையில் செய்தி ஊடகம் ஓன்று நடிகை வாசுகியை பேட்டி எடுத்தது. அந்த பேட்டியில் அவர் கூறுகையில் “தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பலரிடம் வறுமையில் இருப்பதாய் கூறி உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லையாம். ஆனால் இவரின் நிலை கேட்டு அறிந்த தெலுங்கு நடிகர்கள் பலர் உதவிக்கரம் நீட்டி வருகிறார்களாம். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என்ற அந்தஸ்துடன் இருக்கும் சிரஞ்சீவி, நாகபாபு போன்றவர்கள் இவருக்கு தலா ஒரு லட்சம் வரையில் பண உதவி செய்திருக்கின்றனர்.

-விளம்பரம்-

இவர்களை போன்றே தெலுங்கு நடிகர் மஞ்சு விஷ்ணுவும் நடிகை வாசுகிக்கு உதவியிருக்கிறார். மஞ்சு விஷ்ணு திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் தலைவராக இருக்கிறார். இவர் வாசுகிக்கு தன்னுடைய சொந்த செலவில் திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக அடையாள அட்டை வழங்கியுள்ளார். இந்த கார்டின் மூலம் வரும் காலங்களில் யாருடைய தயவும் இல்லாமல் உதவியை பெற பல விதமான ஏற்பாடுகளை செய்திருக்கிறாராம்.

இந்த தகவலை நடிகை கராத்தே கல்யாணி தன்னுடைய முகப்பு பக்கத்தில் பதிவிட்டு நடிகர் மஞ்சு விஷ்ணுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அதே போல நடிகர் நாகபாபு அமெரிக்காவில் இருப்பதாகவும் இந்தியா வந்த பிறகு மேலும் பல உதவிகளை செய்தவதாக உறுதியாக கூறியிருக்கிறாராம். நடிகை வாசுகி பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில் எந்த உதவியும் செய்யாத தமிழ் நடிகர்களை திட்டியும், பல உதவிகள் செய்த தெலுங்கு நடிகர்களை பாராட்டியும் நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement